வாய் புற்றுநோய் - உலகளாவிய ரீதியில் முன்னிலை வகிக்கும் இலங்கை...
உலகளாவிய ரீதியில் வாய் புற்றுநோயினால் பாதிக்கப்பட்ட நோயாளர்களை கொண்ட நாடுகளின் பட்டியலில் இலங்கை முதலிடத்தில் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
வாய் புற்றுநோய்க்கு வெற்றிலை மற்றும் அதன் சார்ந்த பொருட்கள் பாவனையே காரணம் என்றும் பல் வைத்திய சேவையின் பிரதிப் பணிப்பாளர் ஜயசுந்தர பண்டார தெரிவித்துள்ளார்.
இதன்காரணமாக வெற்றிலை பாவனையை முற்றாக நிறுத்துமாறும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
வெற்றிலை பாவனையால் புற்றுநோயை ஏற்படுத்தும் நான்கு காரணங்கள் ஏதுவாக அமைவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
எதிர்காலத்தில் வெற்றிலையில் உள்ளடக்கப்படும் பாக்கு, சுண்ணாம்பு, புகையிலை உள்ளிட்டவைகளை தடுக்க வேண்டும் எனவும், விகாரைகளில் பூஜை தட்டில் புற்றுநோயை உருவாக்கும் வெற்றிலையை வழங்குவது தடை செய்யப்படும் எனவும் வைத்தியர் ஜயசுந்தர இன்று தெரிவித்துள்ளார்.
வாய் புற்றுநோய் - உலகளாவிய ரீதியில் முன்னிலை வகிக்கும் இலங்கை...
Reviewed by Author
on
July 27, 2016
Rating:

No comments:
Post a Comment