சீசன் டிக்கட்டும் இருக்கு…. சீற்ரும் இருக்கு… ஆனால் இருக்ககூடாது.....????---முழுமையான படங்கள் இணைப்பு
மன்னாரில் இருந்து வழமையாக பன்னவெட்டுவான் பகுதியில் அமைந்திருக்கும் தொழிநுட்பக்கல்லூரிக்கு சீசன் பற்றுச்சீட்டில் செல்லும் சுமார் 20மாணவமாணவிகள் இன்று 07-07-2016 குறித்த பேரூந்து செல்லாத காரணத்தினால்
இன்று காலை 7-45 மணிக்கு கொழும்பு செல்லும் இலக்கம்-WP-NB-8803 இலக்கமுடைய அரசபேரூந்தில் ஏறிய மாணவர்கள் சீசன் பற்றுச்சீட்டை காட்டிய பின்பும் முரண்பட்டுத்தான் ஏற்றியதாகவும் ஏறிய மாணவர்கள் ஆசனங்களில் இருக்க அனுமதியளிக்கப்படவில்லை
போதியளவு ஆசனங்கள் வெறுமையாக இருந்த போதும் மாணவர்களை இருக்க விடவில்லை… இதற்கான காரணம் என்ன…..???
மன்னாரில் இருந்து பன்னவெட்டுவான் பகுதியில் அமைந்திருக்கும் தொழிநுட்பக்கல்லூரிக்கு 20மாணவமாணவிகளும் நின்றவாறே சுமார் 45 நிமிடங்கள் பயணத்தினை மேற்கொண்டனர். மக்களின் சேவைக்காகவே அரசாங்கம் இருக்கின்றபோதும் குறிப்பாக மாணவமாணவிகளின் கல்விச்செயற்பாட்டிற்கு எல்லோரும் ஒத்துழைக்க வேண்டும். இப்படியான இடையூறுகள் முறைகேடுகள் ஆரோக்கியமான சேவையாக அமையாது.
சம்மந்தப்பட்ட அதிகாரிகள் அமைச்சர்கள் இவ்வாறான முறைகேடுகளை தொடராமல் இருக்க நடவடிக்கை உடனடியாக மேற்கொள்ள வேண்டும்.
சீசன் டிக்கட்டும் இருக்கு…. சீற்ரும் இருக்கு… ஆனால் இருக்ககூடாது.....????---முழுமையான படங்கள் இணைப்பு
Reviewed by Author
on
July 07, 2016
Rating:

No comments:
Post a Comment