உலகின் சிறந்த சுழற்பந்து வீச்சாளர் யார்? முத்தையா முரளிதரன்....
தற்போதைய சூழ்நிலையில் உலகின் சிறந்த சுழற்பந்து வீச்சாளர் யார் என்பது குறித்து இலங்கை முன்னாள் சுழற்பந்து ஜாம்பவான் முத்தையா முரளிதரன் வெளிப்படையாக தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து கிரிக்கெட் அவுஸ்திரேலியா இணையதளத்திற்கு அவர் அளித்துள்ள பேட்டியில், தற்போதைய சிறந்த டெஸ்ட் சுழற்பந்து வீச்சாளர் இந்திய வீர்ர் அஸ்வின் என நான் நினைக்கிறேன்.
அஸ்வின், கடந்த ஆண்டு டெஸ்ட் கிரிக்கெட் சிறந்த பந்து வீச்சாளர் பட்டியலில் முதல் இடத்தை பிடித்தார். தற்போது இரண்டாவது இடத்தில் உள்ளார்.
எதிர்வரும் இந்தியா – வெஸ்ட் இண்டீஸ் இடையேயான டெஸ்ட் போட்டியில் அஸ்வின் முக்கிய பங்கு வகிக்கவிருக்கிறார்.
தற்போது உள்ள சூழ்நிலையில் இந்திய அணியின் சிறந்த டெஸ்ட் போட்டி பந்து வீச்சாளராக அஸ்வின் திகழ்கிறார். துடுப்பாட்ட வீர்ரை ஏமாற்று வதன் மூலம் அஸ்வின் சிறந்த பந்துவீச்சாளராக திகழ்கிறார்.
இதுவரை 32 டெஸ்ட் போட்டிகளில் விளையாடிவுள்ள அஸ்வின் 176 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார், 16 முறை ஐந்து விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார் என முத்தையா முரளிதரன் குறிப்பிட்டுள்ளார்.
உலகின் சிறந்த சுழற்பந்து வீச்சாளர் யார்? முத்தையா முரளிதரன்....
Reviewed by Author
on
July 06, 2016
Rating:

No comments:
Post a Comment