அதிக விபத்துக்குள்ளாகும் சுவிஸ் விமானங்கள்!
கடந்த பத்தாண்டுகளில் இல்லாத வகையில் 2015 ஆம் ஆண்டும் மட்டும் சுவிஸ் பதிவு விமானங்கள் அதிக விபத்துகளில் சிக்கியுள்ளதாக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்படுகிறது.
சுவிஸ் போக்குவரத்து பாதுகாப்பு புலனாய்வு வாரியம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கடந்த ஆண்டு மட்டும் 75 விபத்துகள் ஏற்பட்டுள்ளதாக பட்டியலிட்டுள்ளது. இதில் 12 பேர் உயிரிழந்துள்ளதாகவும் அந்த அறிக்கை சுட்டிக்காட்டியுள்ளது.
ஆனால் இந்த புள்ளிவிவரங்களை ஒப்பிடுகையில் கடந்த 2005 ஆம் ஆண்டு மட்டும் ஒட்டுமொத்தமாக 71 சம்பவங்கள் நிகழ்ந்துள்ளதாக அறிக்கையில் கூறப்படுகிறது. மேலும் 2004 ஆம் ஆண்டு இது 73 எனவும் பதிவாகியுள்ளது.
கடந்த பத்தாண்டுகளில் சுவிஸில் பதிவு செய்யப்பட்ட விமானங்களால் ஏற்பட்ட விபத்துக்களில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதிகபட்சமாக கடந்த 2012 ஆம் ஆண்டு 22 பேர் கொல்லப்பட்டுள்ளதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.
இருப்பினும் சுவிஸ் பொது விமானச் சேவையின் பல்வேறு பிரிவுகளில் அதிரடியான மாற்றங்கள் கடந்த 2015-ல் இருந்தே துவங்கப்பட்டுள்ளதாகவும் அந்த அறிக்கை சுட்டுக்காட்டியுள்ளது.
சுவிட்சர்லாந்தில் தற்போது குட்டி ரக விமானங்கள் மற்றும் ஹெலிகொப்டர் உள்ளிட்டவைகளின் பாதுகாப்பு நடவடிக்கைகள் மேம்பட்டு வரும் நிலையில், ட்ரோன் உள்ளிட்ட குட்டி விமானங்களால் அதிக விபத்து ஏற்படுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
அதிக விபத்துக்குள்ளாகும் சுவிஸ் விமானங்கள்!
Reviewed by Author
on
July 31, 2016
Rating:

No comments:
Post a Comment