அண்மைய செய்திகள்

recent
-

மடு வலய ஆசிரியர் மகாநாட்டின் இரண்டாவது நாள் நிகழ்வுகள் மிகவும் சிறப்பாக நிறைவுற்றது..... படங்கள் இணைப்பு...

 30-07-2016 இன்று காலை 8:30 மணியளவில் இன்னிய இசை முழங்க விருந்தினர்கள் வரவேற்கப்பட்டதுடன் ஆரம்பமானது. 

காலை அமர்வுகளின் பிரதம விருந்தினராக வடமாகாண மீன்பிடி போக்குவரத்து வர்த்தக வாணிப அமைச்சின் செயலாளர் உயர் திரு சத்திய சீலன் அவர்களும் ஏனைய விருந்தினர்களாக முன்னாள் மன்னார் வலயக் கல்விப்பணிப்பாளர் திரு எம்.எம். சியான் அவர்களும் மடு வலய இளைப்பாறிய பிரதிக்கல்விப் பணிபாளர்களான திரு எமிலியாம்பிள்ளை திரு பத்திநாதன் குரூஸ் திரு யேசுதாசன் ஆகியோர் கலந்து சிறப்பித்தனர். 
இரண்டாவது நாள் நிகழ்வுகளில் ஆசிரியர்களினால் ஆய்வரங்கமும் கற்றல் கற்பித்தல் உபகரண கண்காட்சியும் நடைபெற்றது.
மாலை அமர்வானது மாலை 5:30 மணியளவில் இன்னிய இசையுடன் விருந்தினர்கள் வரவேற்கப்பட்டதுடன் ஆரம்பமானது மாலை அமர்வின் பிரதம விருந்தினராக வடமாகாண பிரதம செயலாளர் உயர் திரு பத்திநாதன் அவர்களும் சிறப்பு விருந்தினராக முன்னாள் மடு வலயக் கல்விப்பணிப்பாளர் உயர்திரு ஜேக்கப் அவர்களும் கலந்து சிறப்பித்தனர் .
மாலை அமர்வில் சிறப்பு நிகழ்வாக கருங்கண்டல் பாடசாலையில் புதிதாக அமைக்கப்பட்ட திறந்தவெளி கலையரங்கமானது வடமாகாண பிரதம செயலாளர் உயர் திரு பத்திநாதன் அவர்களால் திறந்து வைக்கும் நிகழ்வும் சிறப்பாக நடைபெற்றது.
மாலை அமர்வில் ஆசிரியர்களின் திறன்களை வெளிக்கொணரக்கூடிய வகையிலான கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன. இதில் ஆசிரியர்களின் பரதநாட்டியம் நாடகம் வில்லுப்பாட்டு கவியரங்கம் இசைநிகழ்ச்சி கிராமிய சங்கமம் கும்மி கரகம் நாட்டுக்கூத்து காவடி ஒயிலாட்டம் இசைச்சங்கமம் போன்ற பல்வேறு பட்ட கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன 
இந்நிகழ்ச்சியில் மடு வலயத்தின் முதல் கல்விப்பணிப்பாளரான இளைப்பாறிய உயர் திரு ஜேக்கப் அவர்களை கெளரவித்து வாழ்த்து மடல் ஆசிரியர்களினால் வழங்கப்பட்டதுடன் பிரதம செயலாளர் அவர்களையும் கௌரவித்து வாழ்த்து மடல் வழங்கப்பட்டது.
மடு வலய ஆசிரியர் மகாநாட்டின் இரண்டாவது நாள் நிகழ்வுகள் மிகவும் சிறப்பாக நிறைவுற்றது.


 
 





































மடு வலய ஆசிரியர் மகாநாட்டின் இரண்டாவது நாள் நிகழ்வுகள் மிகவும் சிறப்பாக நிறைவுற்றது..... படங்கள் இணைப்பு... Reviewed by Author on July 31, 2016 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.