சாதனையுடன் 10ஆம் நாள் ரியோ ஒலிம்பிக்! - பதக்கப் பட்டியல் இணைப்பு...
பிரேசிலின் ரியோ டி ஜெனிரோ நகரில் நடைபெற்று வரும் ஒலிம்பிக் போட்டிகளில், பத்தாம் நாளான இன்று பல முக்கிய சாதனைகள் நிகழ்த்தப்பட்டுள்ளன.
உலகின் வேகமான மனிதரான உசேன் போல்ட், ஆடவர் 100 மீட்டர் ஓட்டப்போட்டியில் வென்றுள்ளார். இந்த போட்டி பிரிவில் ஒலிம்பிக்கில் தொடர்ச்சியாக மூன்று முறை தங்கப்பதக்கம் வென்ற பெருமையை உசேன் போல்ட் படைத்துள்ளார்.
வரவிருக்கும் 200 மீட்டர், 400 மீட்டர் தொடர் ஓட்டம் ஆகியவற்றிலும் பலரின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் விதமாக உசேன் போல்ட் வென்று விட்டால், ”மூன்று - மூன்று” என்றழைக்கப்படும் 100 மீட்டர், 200 மீட்டர், 400 மீட்டர் தொடர் ஓட்டம் ஆகிய மூன்று போட்டிகளிலும், மூன்று முறை தொடர்சியாக மூன்று தங்க பதக்கங்கள் வென்ற பெருமை உசேன் போல்டுக்கு கிடைக்கும்.
ஆடவர் 400 மீட்டர் ஓட்டப்போட்டியில், தென்னாப்பிரிக்க தடகள வீரரான வேதே வான் நியெகெர்க், தங்கம் வென்றதோடு, 43.03 வினாடிகளில் ஓடி ஒரு புதிய உலக சாதனையை படைத்துள்ளார்.
பிரிட்டன் டென்னிஸ் விளையாட்டு வீரர் ஆன்டி மர்ரி ஒலிம்பிக் ஒற்றையர் டென்னிஸ் இறுதி போட்டியில் தங்கப் பதக்கம் வென்றுள்ளார்.
இந்த வெற்றியின் மூலம், ஒலிம்பிக் ஒற்றையர் டென்னிஸ் பிரிவில் தொடர்ந்து இரண்டாவது முறையாக தங்கப்பதக்கத்தை ஆன்டி மர்ரி பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஆடவர் ஒற்றையர் பேட்மிண்டன் போட்டி பிரிவில், காலிறுதிக்கு முந்தைய சுற்றில் இந்திய வீரர் ஸ்ரீகாந்த் கிடாம்பி 21-19, 21-19 என்ற நேர் செட்களில் டென்மார்க் வீரரை வென்று காலிறுதி போட்டிக்கு தகுதி பெற்றுள்ளார்.
தற்போதைய நிலவரப்படி, பதக்கப் பட்டியலில், அமெரிக்கா, பிரிட்டன், சீனா, ரஷ்யா மற்றும் ஜெர்மனி ஆகிய நாடுகள் முதல் ஐந்து இடங்களில் உள்ளன.
சாதனையுடன் 10ஆம் நாள் ரியோ ஒலிம்பிக்! - பதக்கப் பட்டியல் இணைப்பு...
Reviewed by Author
on
August 16, 2016
Rating:
Reviewed by Author
on
August 16, 2016
Rating:




No comments:
Post a Comment