24 மணிநேரமும் இயங்கும் கடைகள்: ஆதரவு தெரிவிக்காத மக்கள்.....
மத்திய அமைச்சரவையில் 24மணிநேரமும் இயங்கும் கடைகளுக்கு ஆதரவு அளித்ததை தொடர்ந்து, பெரும்பாலான மக்கள் தாங்கள் அதற்கு ஆதரவு தெரிவிக்கவில்லை என கருத்து தெரிவித்திருப்பது அதிர்சியைஏற்படுத்தியுள்ளது.
இச்சட்டம் குறித்து 12,788 பேரிடம் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அப்போது கடைகள், திரையரங்குகள், சேவை நிறுவனங்கள் ஆகியவை 24 மணி நேரமும் செயல்படுவதற்கு ஏற்ப நாட்டில் சட்டம் , ஒழுங்கை பாதுகாக்கும் அடிப்படை கட்டமைப்பு வசதிகள் இல்லை என 73 சதவீதம் பேர் தெரிவித்தனர்.
எனினும் இரவிலும் கடைகளில் வியாபாரம் மேற்கொள்ள வாய்ப்பளிக்கும் இத்திட்டத்திற்கு 50 சதவீதம் பேர், ஆதரவும், 49 சதவீதம் பேர் எதிர்ப்பும் தெரிவித்துள்ளனர்.
மேலும் இம்மாதிரி சட்டங்களை ஏற்பதும் ஏற்காததும் மாநில அரசுகளின் விருப்பம் என கூறப்படுகிறது.
24 மணிநேரமும் இயங்கும் கடைகள்: ஆதரவு தெரிவிக்காத மக்கள்.....
Reviewed by Author
on
August 16, 2016
Rating:

No comments:
Post a Comment