அண்மைய செய்திகள்

recent
-

அமெரிக்கா நாட்டின் 40 பேர் கொண்ட விசேட குழுவினர்கள் யாழ். வருகை...


அமெரிக்கா, இலங்கை ஆகிய நாடுகளுக்கிடையில் நட்புறவு ரீதியான ஒற்றுமையினை வலுப்படுத்தும் முகமாக இன்று திங்கட்கிழமை அமெரிக்கா நாட்டின் 40 பேர்கொண்ட விசேட மருத்துவ குழுவினர்கள் யாழ். குடாநாட்டிற்கு விஜயமொன்றினைமேற்கொண்டுள்ளனர்.

குறித்த குழுவினர் ஐந்து நாட்களுக்கு யாழ். குடாநாட்டில்தங்கியிருப்பதுடன் யாழ். பாதுகாப்புப் படைத்தலைமையகத்தின் ஒழுங்கமைப்பில்யாழ். பாதுகாப்புப் படைத்தலைமையகத்தின் ஒழுங்கமைப்பில் இடம்பெறும் நடமாடும்மருத்துவ சேவையிலும் கலந்து கொள்ளவுள்ளனர்.


America's 40 member medical team at a special Visit in Jaffna

கோப்பாய் பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட வளலாய் இடைக்காடுமகாவித்தியாலத்தில் இன்று காலை இடம்பெற்ற நடமாடும் மருத்துவ முகாமில்இந்த விசேட மருத்துவ குழுவினர்கள் கலந்து கொண்டு மாணவர்கள் மற்றும்பொதுமக்களுக்கு விசேட சிகிச்சைகளையும், மருத்துவ ஆலோசனைகளையும்வழங்கியுள்ளனர்.
குறித்த நடமாடும் சேவையில் யாழ் போதனா வைத்தியசாலையின்பணிப்பாளர் எஸ்.சத்தியமூர்த்தி, மற்றும் பாதுகாப்புப் படைத்தலைமையக அதிகாரிகள் ஆகியோரும் பங்கேற்றனர்.

இதேவேளை, எதிர்வரும் நாட்களில் ஊர்காவற்துறை, வேலணை, நெடுந்தீவு, பருத்தித்துறைஆகிய பிரதேச செயலங்களுக்குட்பட்ட பகுதிகளுக்கும் குறித்த குழுவினர் சென்றுஅங்குள்ள மக்களுக்கும் நடமாடும் மருத்துவ சேவைகளை வழங்கவுள்ளதாகத்தெரிவிக்கப்பட்டுள்ளது.



அமெரிக்கா நாட்டின் 40 பேர் கொண்ட விசேட குழுவினர்கள் யாழ். வருகை... Reviewed by Author on August 16, 2016 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.