அண்மைய செய்திகள்

recent
-

அரிசி பருப்புக்காக 6 வயது மகளை 55 வயது நபருக்கு மணமுடித்து வைத்த தந்தை...


ஆப்கானிஸ்தானில் உணவுகளுக்காக தனது 6 வயது மகளை 55 வயது நபருக்கு திருமணம் செய்து வைத்துள்ள தந்தையின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Ghor மாகாணத்தை சேர்ந்த நபர் ஒருவரால் தனது குடும்பத்தினருக்கு சரியான முறையில் உணவு அளித்து பராமரிக்க முடியவில்லை. இதனால் தனது 6 வயது மகள் Gharibgol - ஐ, அப்பகுதியில் வசித்து வந்த Seyed Abdolkarim (55) என்பவருக்கு வணிக ரீதியான முறையில் கட்டாய திருமணம் செய்து வைத்துள்ளார்.

தனது மகளை திருமணம் செய்து கொடுத்துவிட்டு அதற்கு பதிலாக அரிசி, சர்க்கரை, சமையல் எண்ணெய், ஆடு போன்றவற்றை அந்த நபரிடம் இருந்து வாங்கியுள்ளார்.


சட்டவிரோதமாக நடைபெற்ற இந்த திருமணம் குறித்து அருகில் வசிப்பவர்கள் பொலிசிற்கு தகவல் கொடுத்துள்ளனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த பொலிசார் தந்தையையும், அந்நபரையும் கைது செய்துள்ளனர்.

ஆனால், அந்நபரோ இவள் என்னுடைய மனைவி, தற்போது இவளுடன் நான் எவ்வித உறவும் கொள்ளவில்லை அவளுக்கு 18 வயது பூர்த்தியானவுடன் நான் உறவு கொள்வேன், அதுவரை நான் இவளை பார்த்துக்கொள்வேன் என கூறியுள்ளார்.

இதனை ஏற்க மறுத்த பொலிசார், அவர்கள் இருவரையும் கைது செய்துள்ளனர். தற்போது அச்சிறுமி தாயாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

ஆப்கானிஸ்தானில் சமீபத்தில் தான் 6 வயது சிறுமியை 60 வயது முதியவர் திருமணம் செய்து கொண்டது சர்ச்சையை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.

அரிசி பருப்புக்காக 6 வயது மகளை 55 வயது நபருக்கு மணமுடித்து வைத்த தந்தை... Reviewed by Author on August 06, 2016 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.