பிரான்சில் ரெயில் விபத்தில் சிக்கி 60 பேர் காயம்: 10 பேர் நிலை கவலைக்கிடம்....
பிரான்சின் தென் பகுதியில் ஏற்பட்ட திடீர் ரெயில் விபத்தில் சிக்கி 60 பேர் காயமடைந்துள்ளனர். மீட்பு நடவடிக்கைகள் துரிதமாக நடைபெற்று வருகின்றது.
பிரான்சின் தென் பகுதியில் அமைந்துள்ள Nimes மற்றும் Montpellier ஆகிய நகரங்களுக்கிடையே சென்றுகொண்டிருந்த ரெயில் ஒன்று எதிர்பாராத வகையில் மரத்தில் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.
இந்தனால் அந்த ரெயிலில் பயணம் செய்த பயணிகளில் 60 பேருக்கு காயம் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் இந்த விபத்தில் சிக்கிய 10 பேர் படுகாயமடைந்துள்ளதால் அவர்களின் நிலை கவலைக்கிடமாக உள்ளது எனவும் கூறப்படுகிறது. ஒருவரது நிலை அபாய கட்டத்தில் உள்ளதாகவும் தெரிய வந்துள்ளது.
விபத்தினைத் தொடர்ந்து அந்த ரெயில் தண்டவாளத்தில் இருந்து தடம் புரளவில்லை எனவும், இதனால் ஆள் அபாயம் அதிர்ஷ்டவசமாக தவிர்க்கப்பட்டதாகவும் பயணிகள் கூறியுள்ளனர். ஆனால் ரெயிலின் முதல் பெட்டி கடுமையாக சேதமடைந்துள்ளதாக ரெயில்வே நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளனர்.
ரெயில் திடீரென்று மரத்தில் மோதியபோது பயணி ஒருவர் வெளியே தூக்கி வீசப்பட்டதாக கூறப்படுகிறது. அந்த பயணியின் உடல் நிலை மிகவும் அபாய கட்டத்தில் இருப்பதாக தெரிய வந்துள்ளது.
தற்போது அந்த பகுதியில் வேறு ரெயில்களை இயக்குவதை தாற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளனர்.

பிரான்சில் ரெயில் விபத்தில் சிக்கி 60 பேர் காயம்: 10 பேர் நிலை கவலைக்கிடம்....
Reviewed by Author
on
August 18, 2016
Rating:

No comments:
Post a Comment