கணவனை அடித்து கொலை-----கள்ளக்காதலனுடன் சேர்ந்து மனைவி வெறியாட்டம்,,,,,,
கோவை மாவட்டம் சூலுரில் பாம்பை விட்டு கொலை செய்ய முயன்று தோல்வியடைந்ததால் காதலனுடன் சேர்ந்து கணவனை மனைவி அடித்து கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சூலூரை சேர்ந்த சாரதா(32) என்பவர் தான் கணவனை கொலை செய்த குற்றத்திற்காக தற்போது கைதாகியுள்ளவர். இவரது கணவன் சக்திவேலுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக இந்த முடிவுக்கு வந்ததாக கூறப்படுகிறது.
ஆனால், இவருக்கு சுந்தரம் என்ற நபருடன் ஏற்பட்ட பழக்கமே இந்த கொலைக்கு முக்கிய காரணம் என பொலிஸ் விசாரணையில் தெரிய வந்துள்ளது.
இவர்கள் இருவரும் ஒன்றாக சேர்ந்து வாழும் பொருட்டு சக்திவேலை பாம்பை விட்டு கொலை செய்ய திட்டமிட்டுள்ளனர்.
இதற்காக சூலூர், பட்டணம் புதூர் பகுதியில் இருந்து விஷ நாகம் ஒன்றை ஏற்பாடு செய்துள்ளனர். அந்த நாகத்தை சக்திவேல் தூங்கும் படுக்கை அறையில் இவர்கள் விட்டுள்ளனர். ஆனால் பலமுறை முயன்றும் இவர்களின் திட்டம் பலிக்கவில்லை, பாம்பு அந்த அறையில் இருந்து வெளியேறிய வண்ணமே இருந்துள்ளது.
இந்த நிலையில் சாரதா 15,000 ரூபாய் தந்து சுந்தரத்திடம் தமது கணவனை கொலை செய்ய ஏற்பாடு செய்துள்ளார். மேலும் அந்த நபருக்கு இருகூர் பகுதியில் தொழில் தொடங்கும் வகையில் 5 லட்சம் ரூபாய் வழங்குவதாகவும் உறுதி அளித்துள்ளார்.
இதனையடுத்து சுந்தரம் தமது உதவியாளர் ராதாகிருஷ்ணன்(24) என்பவருடன் இணைந்து கடந்த 8 ஆம் திகதி இரவு சக்திவேலை கட்டையால் அடித்து கொலை செய்துள்ளனர். பின்னர் தண்ணீர் தொட்டியின் அடியில் அவரது உடலை புதைத்துள்ளனர்.
இந்த விவகாரம் வெளியே கசிந்த நிலையில் சந்தேகத்தின் அடிப்படையில் சாரதாவை கைது செய்த பொலிசார், அவர் அளித்த தகவலின் பேரில் சுந்தரம் மற்றும் ராதாகிருஷ்ணனையும் கைது செய்தனர்.
சுந்தரம் சென்னையில் பிறந்து வளர்ந்தவர் என்றும், வேலை நிமித்தமாக கடந்த 4 ஆண்டுகளாக கோவையில் வசித்து வருவதாகவும் பொலிஸ் விசாரணையில் தெரிய வந்துள்ளது.
கள்ளக்காதல்தான் சாரதாவை தமது கணவனை கொலை செய்ய தூண்டியதாக பொலிஸ் தரப்பு தெரிவித்துள்ளது.
கணவனை அடித்து கொலை-----கள்ளக்காதலனுடன் சேர்ந்து மனைவி வெறியாட்டம்,,,,,,
Reviewed by Author
on
August 18, 2016
Rating:

No comments:
Post a Comment