அண்மைய செய்திகள்

recent
-

கொசுக்கடி போட்டியில் சாதனை படைத்த 9 வயது சிறுமி!


ரஷ்யாவில் நடைபெற்ற கொசுக்கடி போட்டியில் 9 வயது சிறுமி 43 கொசுக்கடி வாங்கி சாதனை படைத்துள்ளார்.

ரஷ்யாவில் வருடா வருடம் கொசுக்கடி திருவிழா நடைபெறும். அது போல இந்த ஆண்டிற்கான கொசுக்கடி திருவிழா கடந்த 14 ஆம் திகதி பெரஸ்னிகி என்ற நகரில் நடைபெற்றது.

இதற்காக அங்குள்ள காட்டு பகுதிக்குள் போட்டியில் பங்குபெறும் அனைவரும் உடம்பில் ஆடை எதும் இல்லாமல் அங்கு சென்று தங்கி வரவேண்டும்.

அது போல பலதரப்பட்ட வயதினை சேர்ந்த பொதுமக்கள் இப்போட்டியில் பங்கேற்றனர். பலரும் கொசுக்கடி தாங்காமல் வெகு விரைவாக காட்டிலிருந்து வேகமாக வெளியே வந்து விட்டனர்.

இதில் இல்யுகினா என்ற 9 வயது சிறுமி அதிக கொசுக்கடி வாங்கி இறுதியாக வெளியே வந்தார்.

இவர் உடம்பில் 43 கொசுக்கடிகள் உள்ளதாகவும், இச்சிறுமியை தான் அதிக அளவில் கொசுக்கள் கடித்துள்ளதாக கூறி நடுவர்கள் அச்சிறுமிக்கு முதல் பரிசு கொடுத்து பாராட்டினர்.

மேலும் இச்சிறுமி தான் கொசுக்களுக்கு பிடித்த மிகவும் டெஸ்டியான பெண் என்ற செல்ல பட்டத்தையும் அவருக்கு கொடுத்தனர்.

ரஷ்யாவில் கொசுவால் ஜிகாவைரஸ் பரவும் நிலையில், அந்நாட்டில் கொசுக்கடிதிருவிழா நடைபெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

கொசுக்கடி போட்டியில் சாதனை படைத்த 9 வயது சிறுமி! Reviewed by Author on August 17, 2016 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.