ஜரோப்பிய ஒன்றியத்தினால் வடக்கு கிழக்குக்கு மூவாயிரம் வீடுகள்.....
யுத்தத்தினால் பாதிக்கப்பட்டுள்ள வடக்கு கிழக்கு மக்களின் வீட்டுத்தேவைகளை பூா்த்தி செய்யும் பொருட்டு மேலும் மூவாயிரம் வீடுகளை வழங்க ஜரோப்பிய ஒன்றியம் முன்வந்திருக்கிறது.
இதற்கான கலந்துரையாடல் திங்கள் 15-08-2016 கிழமை கிளிநொச்சி மாவட்டச் செயலகத்தில் இடம்பெற்றது.
வடக்கு கிழக்கில் தெரிவு செய்யப்பட்டுள்ள மாவட்டங்களில் வீட்டுத் திட்டப் பயனாணிகள் தெரிவு செய்யப்பட்டு இந்த வருட இறுதிக்குள் நடைமுறைப்படுத்தும் வண்ணம் செயற்பாடுகளை முன்னெடுக்கவும் இக்கலந்துரையாடலில் தீா்மானிக்கப்பட்டுள்ளது.
இக்கலந்துரையாடலில் கிளிநொச்சிமாவட்ட அரச அதிபா் சுந்தரம் அருமைநாயகம்மு, முல்லைத்தீவு மாவட்ட அரச அதிபா் திருமதி றூபவதி கேதீஸ்வரன் மற்றும் ஐரோப்பா ஒன்றியத்தின் பிரதிதிகளான ஜெம்ரொயல்ட், லிங்கி சகபிரறே ஆகியோருடன் பிரதேச செயலாளா்கள் அதிகாரிகள் ஆகியோா் கலந்துகொண்டனா்.
ஜரோப்பிய ஒன்றியத்தினால் வடக்கு கிழக்குக்கு மூவாயிரம் வீடுகள்.....
Reviewed by Author
on
August 17, 2016
Rating:

No comments:
Post a Comment