அண்மைய செய்திகள்

recent
-

நான் ஏன் சாரணர் ஆனேன்?


சாரணர் இயக்கம் உலகளாவிய அளவில் செயற்படும் ஓர் இளைஞர் இயக்கமாகும். இது 1907ஆம் ஆண்டு sir பேடன் பவல் பிரபுவால் தொடங்கப்பட்டது.

இவ்வியக்கம் இளைய சமூகத்தினர் மத்தியில் உடல், உள சமூக ரீதியான பல மேம்பாடுகளை ஏற்படுத்தவே உருவாக்கப்பட்டது.

இருபதாம் நூற்றாண்டின் மத்தியில் சாரணர் இயக்கம், குருளைச்சாரணர், ஆண்கள் சாரணர் என பல்வேறு விதமாகப் பிரிந்து செறிந்து காணப்பட்டது.

அதேவேளை 1910ஆம் ஆண்டில் பெண்களுக்காக இவ்வமைப்பு ஆரம்பிக்கப்பட்டது. இதுவும் ஆண்களுடைய அமைப்பைப் போலவே சிறுதோழியர், பெண் சாரணியர் என பல்வேறு விதமாகப் பிரிந்து செறிந்து காணப்பட்டது.

சாரணர் இயக்கம் உலகிலுள்ள இளைஞர் அமைப்புக்களில் உலகம் முழுவதும் பரந்து காணப்படும் அமைப்புக்களில் ஒன்றாகும்.

2007ஆம் ஆண்டளவில் உலகின் 216 நாடுகளிலும் ஆண்களும், பெண்களுமாக மொத்தமாக 8 மில்லியனுக்கும் அதிகமான சாரணர்கள் உள்ளனர்.

216 நாடுகளிலிருந்தும் 2010ஆம் ஆண்டளவில் உலகம் பூராகவும் 32 மில்லியனுக்கும் அதிகமான உறுதி செய்யப்பட்ட சாரணர்கள் காணப்படுகின்றனர்.

அதேபோல 2006 ஆம் ஆண்டளவில் 10 மில்லியனுக்கும் அதிகமான பெண் சாரணியர்கள் காணப்படுகின்றனர்.

தரவரிசைப்படி 20 நாடுகளின் சாரண, சாரணிய உறுப்பினர்கள் பட்டியல்

  • இந்தோனேசியா    17,100,000    7.2%    1912
  • அமெரிக்கா    7,500,000    2.4%    1910-1912
  • இந்தியா    4,150,000    0.3%    1909-1911
  • பிலிப்பைன்ஸ்    2,150,000    2.2%    1910-1918
  • தாய்லாந்து    1,300,000    1.9%    1911-1957
  • பங்களாதேஷ்    1,050,000    0.7%    1920-1928
  • ஐக்கிய இராச்சியம்    1,000,000    1.6%    1907-1909
  • பாக்கிஸ்தான்    575,000    0.3%    1909-1911
  • கென்யா    480,000    1.1%    1910-1920
  • ஜேர்மனி    250,000    0.3%    1910-1912
  • தென் கொரியா    270,000    0.5%    1922-1946
  • உகண்டா    230,000    0.6%    1915-1914
  • இத்தாலி    220,000    0.4%    1910-1912
  • கனடா    220,000    0.7%    1908-1910
  • ஜப்பான்    200,000    0.2%    1913-1919
  • பிரான்ஸ்    200,000    0.3%    1910-1911
  • பெல்ஜியம்    170,000    1.5%    1911-1915
  • போலந்து    160,000    0.4%    1910-1910
  • நைஜீரியா    160,000    0.1%    1915-1919
  • ஹொங்கொங்    160,000       


Scout: Documentary
பேடன் பவல்

ராபர்ட் பேடன் பவல் சாரணர் இயக்கத்தை உருவாக்கியவர் ஆவார். இவர் இங்கிலாந்தில் பிறந்த ஆங்கிலத் தளபதி. 1906ஆம் ஆண்டு சாரணர் இயக்கத்தை தோற்றுவித்தார்.

ரெவறண்ட் பேடன் பவல் என்பவரின் மூன்றாவது திருமணத்தில் பிறந்த பத்துக் குழந்தைகளில் எட்டு ஆண்கள். அந்த ஆண்களில் ஏழாவதாகப் பிறந்தவர் பேடன் பவல்.

இவருக்கு மூன்று வயதாக இருக்கும் போது இவரது தந்தையார் காலமானார். காலமானவரைக் கௌரவிப்பதற்காகப் பவல் என்றிருந்த குடும்பப் பெயர் பேடன் பவல் ஆக்கப்பட்டது.

புலமைப் பரிசில் பெற்று சார்ட்டார்ஹவுஸ் பாடசாலையில் கல்வி கற்ற பேடன் பவல் 1876ஆம் ஆண்டு பிரித்தானிய இராணுவத்தில் இணைந்தார்.

பொதுவாக சாரணர் இயக்கத்தில் இடது கையால் குலுக்குவது வழக்கம் காரணம் சாரணர் தந்தை ராபர்ட் பேடன் பவல் இராணுவத்தில் இருக்கும் போது பல் போர்களில் தனது வலது கையால் எதிரிகளை அழித்தமை மற்றும் இடப்பக்கமாக இதயம் சரிந்து காணப்படுவதால் மனப்பூர்வமாக வாழ்த்துக்களை மற்றும் நன்றிகளை தெரிவிக்கவே என்பது பலர் அறியாத உண்மை.

சிறுவர்களுக்கான சாரணியம் (Scouting for Boys) என்ற நூலை 1908ஆம் ஆண்டு பதிப்பித்தார். ஆப்பிரிக்காவிற்குத் திரும்பிய பேடன் பவுல் தனது புத்தகமான எய்ட்ஸ் டு ஸ்கவுட்டிங் (Aids to Scouting) வெற்றிகரமாக விற்பனை ஆவதனையும் அவை பல இளைய மற்றும் ஆசிரியர்களைப் பயிற்றுவிப்பதற்குப் பயன்படுவதையும் கண்டார்.

1907ஆம் ஆண்டு சாரணியம் ஓர் சோதனை முயற்சியாக 20 சிறுவர்களுடன் தொடங்கியது. முதலில் தேசிய ரீதியில் துவங்கப்பட்ட இம்முயற்சி பின்னர் உலக அளவில் புகழ்பெற்றது.

இவரின் முயற்சியால் இன்று உலக முழுவதும் சாரண இயக்கம் பரந்து காணப்படுகின்றது. 1910இல் ஓய்வு பெற்றார். 1941 இல் கென்யாவில் இயற்கை எய்தினார்.



நான் ஏன் சாரணர் ஆனேன்? Reviewed by Author on August 05, 2016 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.