வடக்கில் கடற்படையினரின் பிரசன்னதை விரும்பும் மக்கள்! மனோ கணேசன்.....
தென்னிந்திய மீனவர்களின் அத்துமீறல்களை தடுப்பதற்காக இலங்கையின் கடற்படையினர் அவசியம் என்று வடக்குமக்கள் கூறுவதாக அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நேற்று இடம்பெற்ற சர்வதேச மனித உரிமைகள் சாசனத்தின் சிங்கள மொழிப்பெயர்ப்பு வெளியீட்டு நிகழ்வு ஒன்றில் உரையாற்றிய அமைச்சர் மனோ கணேசன் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
அண்மையில் வடக்குக்கு சென்றிருந்த தம்மிடம் அங்குள்ள மக்கள் இதனை தெரிவித்ததாக அமைச்சர் கூறியுள்ளார்.
வடக்கு மக்களின் இந்தநிலைப்பாட்டை நாடு அறிந்திருப்பது அவசியம் என்று மனோ கணேசன் தெரிவித்தார்.
இதேவேளை பாதுகாப்பு படையினர் தவறு செய்திருந்தால் அவர்கள் தண்டிக்கப்பட வேண்டும். போரில் ஈடுபட்ட எந்தவொரு நாட்டிலும் இது நடைமுறையில் உள்ள விடயமாகும் என்று அவர் தெரிவித்தார்.
இலங்கையில் செயற்பட்ட இந்திய அமைதிப்படையினர், ஈராக்கில் செயற்பட்ட அமெரிக்கப்படையினர், அதேபோல இலங்கையின் படையினர் எவராக இருந்தாலும், போரின்போது குற்றம் இழைத்திருந்தால் அவர்கள் தண்டிக்கப்பட வேண்டும்.
இதனை வைத்துக்கொண்டு முழு படையினரும் தண்டிக்கப்பட போகிறார்கள் என்ற கருத்தை ஏற்றுக்கொள்ளமுடியாது என்றும் அமைச்சர் கூறினார்.
பாதுகாப்பு படையினர் காட்டிக்கொடுக்கப்படுகிறார்கள் என்று கூறும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச, 1990 ஆம் ஆண்டுகளில் ஜெனீவாவுக்கு சென்று பாதுகாப்பு எதிராக முறையிட்டமையை மனோ கணேசன் சுட்டிக்காட்டினார்
தமிழ் தேசியக்கூட்டமைப்பின் சில நாடாளுமன்ற உறுப்பினர்கள், கடந்த அரசாங்க காலத்தின் போது நாட்டில் இருந்து வெளியேறினர்.
எனினும் தாம் சில சிங்கள தலைவர்களுடன் இணைந்து சட்டத்துக்கு புறம்பான கொலைகளுக்கு எதிராக குரல் கொடுத்ததாக மனோ கணேசன் நினைவுப்படுத்தினார்.
வடக்கில் கடற்படையினரின் பிரசன்னதை விரும்பும் மக்கள்! மனோ கணேசன்.....
Reviewed by Author
on
August 22, 2016
Rating:

No comments:
Post a Comment