உங்கள் அடையாளத்தை உலகில் விட்டுச்செல்லுங்கள்! போப் பிரான்சிஸ் கோரிக்கை....
இளைஞர் மற்றும் யுவதிகள் சமூக வலைதளங்களில் அதிக கவனம் செலுத்துவதை தவிர்த்துக்கொள்ள வேண்டும் என போப் பிரான்சிஸ் கோரிக்கை விடுத்துள்ளார்.
இந்நிலையில், அரசியல் மற்றும் சமூகம் சார்ந்த விடயங்களில் அதிக கவனத்தை செலுத்துமாறும் போப் பிரான்சிஸ் வலியுறுத்தியுள்ளார்.
ஐந்து நாள் விஜயமாக போலாந்து சென்றுள்ள போப் பிரான்சிஸ், தனது விஜயத்தின் நிறைவாக இன்று பொது நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டிருந்தார்.
இதன் போது தொடர்ந்து கருத்து தெரிவித்த போப் பிரான்சிஸ், நல்லதொரு இதயத்தை தரவிறக்கம் செய்யவும், உடனடி நுகர்வுக்கு பதிலாக உலகை மாற்ற முயல வேண்டும் என நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.
இளைஞர்கள் மற்றும் யுவதிகள் சமூக வலைதளங்கள், வீடியோ கேம்கள், கணினி, ஸ்மார்ட் போன் போன்றவற்றுக்கு குறைந்த நேரத்தை மட்டுமே செலவிட வேண்டும்.
இதேவேளை, சமூக சேவை மற்றும் அரசியல் சார்ந்த விடயங்களில் அதிக நேரம் செலவிட வேண்டும் என வலியுறுத்திய அவர், இந்த உலகத்தில் உங்கள் அடையாளங்களை விட்டு செல்லுங்கள்" எனவும் கூறியுள்ளார்.
உங்கள் அடையாளத்தை உலகில் விட்டுச்செல்லுங்கள்! போப் பிரான்சிஸ் கோரிக்கை....
Reviewed by Author
on
August 01, 2016
Rating:

No comments:
Post a Comment