மான்செஸ்டர் யுனைடெட் கால்பந்து அணி வீரர்களின் சம்பளம் எவ்வளவு?
இங்கிலாந்து பிரீமியர் லீக் தொடரில் முக்கிய பங்கு வகிக்கும் மான்செஸ்டர் யுனைடெட் கால்பந்து அணி இங்கிலாந்தின் மிகவும் பழமை வாய்ந்த கிளப் அணிகளில் ஒன்றாக உள்ளது.
இந்த அணி ஒவ்வொரு வீரர்களையும் மில்லியன் கணக்கில் பவுண்டு கொடுத்து வாங்கியுள்ளது.
இந்த நிலையில் பிரான்ஸ் நாட்டின் நடுக்கள வீரரான பால் போக்பாவை சுமார் 100 மில்லியன் பவுண்டுக்கு யுவான்டஸ் கிளப்பிடம் இருந்து வாங்கியுள்ளது.
இந்த அளவு டிரான்ஸ்ஃபர் என்பது கால்பந்து கிளப் அணி வரலாற்றில் இதுதான் முதன்முறை.
போக்பாவிற்கு வாரச் சம்பளம் மட்டும் சுமார் 2,75,000 பவுண்டு கொடுக்க மான்செஸ்டர் யுனைடெட் சம்மதித்துள்ளது. அதாவது போக்பா சுமார் 2 கோடியே 43 லட்சம் ரூபாய் வாரச்சம்பளமாக பெற இருக்கிறார்.
இந்த அணியில் 19 வீரர்களில் கடைசியாக 1300 பவுண்டு வரை வாரச் சம்பளம் வாங்குகிறார்கள். அணியின் மானேஜர் ஜோஸ் மௌரினோ 3,12,500 பவுண்டு என அதிகமாக சம்பளம் வாங்குகிறார்.
மான்செஸ்டர் அணியில் விளையாடும் வீரர்கள் வாங்கும் வாரச் சம்பள விபரம்
- பால் போக்பா- 2,75,000 பவுண்டு
- வெயின் ரூனே - 2,60,000 பவுண்டு
- ஸ்லாடன் இப்ராஹிமோவிக் - 2,50,000 பவுண்டு
- ஹென்றிக் - 2,00,000 பவுண்டு
- பாஸ்டியான் ஸ்வெயின்ஸ்டெய்கர் -2,00,000 பவுண்டு
- டேவிட் டி ஜியா - 2,00,000 பவுண்டு
- ஜூயான் மாடா - 1,40,000 பவுண்டு
- அஸ்லெ யங் - 1,10,000 பவுண்டு
- மோர்கன் ஸ்னெய்டர்லின் - 1,00,000 பவுண்டு
- கிறிஸ் ஸ்மாலிங் - 80,000 பவுண்டு
- மைக்கேல் கார்ரிக் - 80,000 பவுண்டு
- டேலே பிளின்ட் - 75,000 பவுண்டு
- அன்டர் ஹெர்ரேரா - 75,000 பவுண்டு
- மெம்பிஸ் - 90,000 பவுண்டு
- மரௌயனெ பெல்லைனி - 80,000 பவுண்டு
மான்செஸ்டர் யுனைடெட் கால்பந்து அணி வீரர்களின் சம்பளம் எவ்வளவு?
Reviewed by Author
on
August 04, 2016
Rating:

No comments:
Post a Comment