மன்னார்-யாழ்ப்பாணம் பிரதான வீதி கள்ளியடி சந்தியில் பாரிய விபத்து -பொலிஸ் அதிகாரி உட்பட இருவர் பலி-Photos
மன்னார்-யாழ்ப்பாணம் பிரதான வீதி இலுப்பைக்கடவை சந்தியில் நேற்று திங்கட்கிழமை மாலை 4.40 மணியளவில் இடம்பெற்ற விபத்தில் வீதி போக்குவரத்துப்பிரிவு பொலிஸ் அதிகாரி ஒருவர் உட்பட இருவர் உயிரிழந்துள்ளனர்.
பொது மகன் ஒருவரும்,வீதி போக்குவரத்துப்பிரிவு பொலிஸ் அதிகாரி ஒருவரும் உயிரிழந்துள்ளதை உறுதிப்படுத்தியுள்ள மன்னார் பொது வைத்தியசாலை அதிகாரிகள் உயிரிழந்தவர்களின் விபரங்களை நேற்றிரவு வரை வெளிப்படுத்தவில்லை.
கள்ளியடி சந்தியில் பட்டா ரக வாகனத்தினை இடைமறித்த வீதி போக்குவரத்துப்பிரிவு பொலிஸார், சாரதியிடம் ஆவணங்களை பரிசோதனை செய்து கொண்டிருந்த போது மடு திருத்தலத்தில் இருந்து யாழ்ப்பாணம் சென்றுகொண்டிருந்த ஹயஸ் ரக வாகனம் கட்டுப்பாட்டை இழந்த நிலையில் வீதியில் நிறுத்தி வைக்கப்பட்டு ஆவணங்கள் சோதனைக்குட்படுத்தப்பட்ட பட்டா ரக வாகனத்துடன் மோதியுள்ளது.
இதன்போது பட்டா ரக வாகனத்தை சோதனைக்குட்படுத்திய வீதிப்போக்குவரத்து பிரிவு பொலிஸார் மற்றும் குறித்த வாகனத்தின் உரிமையாளர் ஆகிய மூவர் மீதும் குறித்த பட்டா ரக வாகனம் மோதியுள்ளது.இதன்போது குறித்த மூவரும் காயமடைந்த நிலையில் வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லும் போது குறித்த பட்டா ரக வாகனத்தின் சாரதி உயிரிழந்தார்.
இந்த நிலையில் வீதி போக்குவரத்துப்பிரிவு பொலிஸ் அதிகாரிகள் இருவர் மற்றும் ஹயஸ் ரக வாகனத்தில் பயணித்த யாழ் மறை மாவட்டத்தை சேர்ந்த அருட்தந்தை ஆகிய மூவரும் மன்னார் பொது வைத்தியசாலையில் அதி தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டனர்.
எனினும் சிகிச்சை பலன் இன்றி வீதி போக்குவரத்துப்பிரிவு பொலிஸ் அதிகாரி ஒருவர் உயிரிழந்தார்.மேலும் ஒரு வீதி போக்குவரத்துப்பிரிவு பொலிஸ் அதிகாரி மன்னார் பொது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.
விபத்தில் காயமடைந்த யாழ்.மறை மாவட்டத்தைச் சேர்ந்த அருட்தந்தை மேலதிக சிகிச்சைக்காக அநுராதபுரம் வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.குறித்த விபத்து தொடர்பாக இலுப்பைக் கடவை பொலிஸார் விசாரணைகளை மேற் கொண்டு வருகின்றனர்.
மன்னார்-யாழ்ப்பாணம் பிரதான வீதி கள்ளியடி சந்தியில் பாரிய விபத்து -பொலிஸ் அதிகாரி உட்பட இருவர் பலி-Photos
Reviewed by NEWMANNAR
on
August 16, 2016
Rating:

No comments:
Post a Comment