இன்றைய (03-07-2016) கேள்வி பதில் -"காசோலை மோசடி" வழக்கு
கேள்வி:-
மதிப்பிற்குரிய சட்டத் தரணி சுதன் ஐயா!நான் வெள்ளவத்தையிலிருந்து பாலகுமரன். ஐயா!நான் ஒரு நிறுவனத்தில் முதலீட்டு பங்குதாரராக மட்டும் உள்ளேன். எங்கள் கம்பனியில் 5 பேர் பங்குதாரர்களாக உள்ளனர். எங்களில் ஒருவருக்கு காசோலை சார்ந்த அதிகாரத்தினை கொடுத்துள்ளோம். அவர் தான் எங்கள் நிறுவனத்தின் முழுச் செயல்பாட்டையும் கவனித்துக் கொள்கிறார். இந்நிலையில் எங்கள் நிறுவனம் ஒரு கம்பனிக்குப் பணம் தர வேண்டியிருந்தது. அதற்காகக் கொடுத்த காசோலை எங்கள் நிறுவனத்தின் வங்கிக் கணக்கில் பணம் இல்லாமல் திரும்பி விட்டது. அந்தக் கம்பனிக்காரர் எங்கள் அனைவர் மீதும் "காசோலை மோசடி" வழக்குத் தொடர்ந்துள்ளார்.
இப்படிப்பட்ட சூழ்நிலையில் இருந்து எவ்வாறு என்னை பாதுகாப்பது ஐயா?
பதில்:−
அன்பான சகோதரரே! ஒரு பங்கு நிறுவனத்தில் அனைவரும் அந்நிறுவனத்தின் அன்றாடச் செயல்பாடுகளில் ஈடுபட முடியாது என்பதால் ஒரு பங்குதாரரை நிர்வாகப் பங்குதாராக(காசோலை உட்பட) நியமிக்கிறார்கள். அவர் அந்த நிறவனத்தின் அன்றாட வியாபாரச் செயல்பாடுகளைக் கவனிக்கும் நபராகச் சட்டம் கருதுகிறது. எனவே அந்த நிறுவனத்தின் மீதும் காசோலை அதிகாரம் பெற்று நிறுவனத்தின் அன்றாட நடவடிக்கைகளைக் கவனித்து வரும் ஒரு பங்கு தாரர் மீது மட்டுமே வழக்குத் தொடர வேண்டும் எனப்பல வழக்குகளில் தீர்மானிக்கப்பட்டுள்ளது. எனவே முதலீட்டுப் பங்குதாரர் என்ற அடிப்படையில் உங்களை வழக்கில் சேர்த்திருப்பது சட்டப்படி சரியானதல்ல. ஆகவே உங்களை அந்த வழக்கிலிருந்து விடுவிக்கக்கோரி மனுத் தாக்கல் செய்து வழக்கிலிருந்து வெளியே முடியும்.
குறிப்பு
சட்டப் பிரச்சனை தொடக்கம், மன உளைச்சல் ,உளவியல் வரையிலான தங்களுடைய சந்தேகங்களை எமக்கு மின்னஞ்சலுயூடாக அனுப்பி வைக்க முடியும்.
அதற்கு வழக்கறிஞரும் சமூக ஆர்வளருமான திரு சுதன் ( SuthanLaw ) தங்களுடைய கேள்விகளுக்கு பதிலளிக்கவுள்ளார்.
கேள்விகளை எமக்கு அனுப்பிவைக்க வேண்டய மின்னஞ்சல் முகவரி

newmannar@gmail.com அனுப்பும் போது "கேள்வி-பதில்" என குறிப்பிட்டு அனுப்பவும் .
இன்றைய (03-07-2016) கேள்வி பதில் -"காசோலை மோசடி" வழக்கு
Reviewed by NEWMANNAR
on
August 17, 2016
Rating:

No comments:
Post a Comment