'ஆயிரத்திற்கும் அதிகமான குழந்தை திருமணங்கள் நடந்துள்ளன’: அதிர்ச்சி ஆய்வு தகவல் 'ஆயிரத்திற்கும் அதிகமான குழந்தை திருமணங்கள் நடந்துள்ளன’: அதிர்ச்சி ஆய்வு தகவல்
ஜேர்மனி நாட்டில் அரசாங்க அதிகாரிகளுக்கு தெரிந்து ஆயிரத்திற்கும் அதிகமான குழந்தை திருமணங்கள் நடந்துள்ளதாக அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஜேர்மனி நாட்டு நீதித்துறை அமைச்சரான Heiko Maas நேற்று அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதிலும் ‘கடந்த 18 மாதங்களில் ஜேர்மனி நாட்டிற்குள் புலம்பெயர்ந்து வந்த ஆயிரத்திற்கும் மேற்பட்ட குழந்தைகள் வயது மூத்தவர்களை திருமணம் செய்துள்ள சம்பவம் அதிகரித்துள்ளது.
அரசு அதிகாரிகளுக்கு தெரிந்து இந்த எண்ணிக்கை பதிவு செய்யப்பட்டிருந்தாலும், பதியப்படாத எண்ணிக்கை இதனைவிட கூடுதலாக இருக்கும்.
11 வயது முதலே குழந்தைகளுக்கு திருமணத்தை செய்து விடுவதால், அவர்கள் கர்ப்பம் தரித்து பள்ளிகளுக்கு செல்ல முடியாத நிலை ஏற்படுகிறது.
ஜேர்மனி நாட்டில் கட்டாயப்படுத்தி திருமணம் செய்வது தண்டனைக்குரிய குற்றம் ஆகும். இதுபோன்ற செயல்களில் ஈடுபடுபவர்களுக்கு 5 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்க சட்டத்தில் இடம் உள்ளது.
எனிவே, ஜேர்மனியில் உள்ள அகதிகளுக்கு இந்நாட்டு சட்டவிதிகளை எடுத்துக் கூறி புரிய வைக்க வேண்டும்.
இதன் அடிப்படையில் ஒரு குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளதாகவும், இக்குழு எதிர்வரும் செப்டம்பர் 5ம் திகதி முதல் தனது பணியை தொடங்கும் என்றும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.
'ஆயிரத்திற்கும் அதிகமான குழந்தை திருமணங்கள் நடந்துள்ளன’: அதிர்ச்சி ஆய்வு தகவல் 'ஆயிரத்திற்கும் அதிகமான குழந்தை திருமணங்கள் நடந்துள்ளன’: அதிர்ச்சி ஆய்வு தகவல்
Reviewed by Author
on
August 15, 2016
Rating:

No comments:
Post a Comment