அண்மைய செய்திகள்

recent
-

தமிழினத்தின் மிகச்சிறந்த மனித உரிமை போராளி யாழில் மரணம்....


படுகொலை செய்யப்பட்ட மனித உரிமை போராளி ராஜினி திராணகமவின் தகப்பனார் ராஜசிங்கம் யாழ்ப்பாணத்தில் தனது 90ஆவது வயதில் இன்று மரணமடைந்துள்ளார்.

சிங்கள, தமிழ் உறவுகள் மிகவும் கூர்மையான மோதலை நோக்கி நகர்ந்து கொண்டிருந்த 1977ஆம் ஆண்டுகளில் தன் புதல்வி ராஜினியை தென்னிலங்கையின் சிங்களப் புத்திஜீவி ஒருவருக்கு திருமணம் முடித்துக் கொடுத்ததன் மூலம் ராஜசிங்கம் யாழ்ப்பாணத்தில் பெரும் புரட்சியொன்றை செய்திருந்தார்.

அதன் பின் வந்த காலங்களில் ராஜினி தன் கணவர் தயாபால திராணகமவுடன் இணைந்து மேற்கொண்ட மனித உரிமைகளுக்கான செயற்பாடுகளின் போது ராஜசிங்கமும் தன் மகளுக்காக பல்வேறு அச்சுறுத்தல்கள் மற்றும் சவால்களை எதிர்கொண்டிருந்தார்.

தமிழினத்தின் மிகச்சிறந்த மனித உரிமைப் போராளிகளில் ஒருவரும், மருத்துவ கலாநிதியுமான படுகொலை செய்யப்பட்ட ராஜினி திராணகமவின் மாறாத் துயரும் கொண்ட அவர், தமிழ் மக்களின் அவல வாழ்க்கை குறித்தும் கடைசி வரை தம் நினைவுகளைப் பகிர்ந்து கொண்டிருந்ததாக கலாநிதி தயாபால திராணகம, தன் மாமனார் குறித்து குறிப்பிட்டுள்ளார்.

காலம் சென்ற ராஜசிங்கத்தின் இறுதிக் கிரியைகள் நாளை யாழ்ப்பாணத்தில் நடைபெறவுள்ளது.

தமிழினத்தின் மிகச்சிறந்த மனித உரிமை போராளி யாழில் மரணம்.... Reviewed by Author on August 15, 2016 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.