எவரஸ்ட் சிகரத்தை தொட்ட முதல் பெண்ணுக்கு தூதுவர் பதவி.....
எவரஸ்ட் சிகரத்திற்கு ஏறிய முதல் இலங்கை பெண்ணான ஜயந்தி குரு உத்தும்பாலவுக்கு ஆக்கக்குறி (Brand) தூதுவர் பதவியை பெண்கள் மற்றும் சிறுவர் விவகார அமைச்சு வழங்கியுள்ளது.
இதனடிப்படையில் பெண்களின் உரிமைகளை பாதுகாப்பது தொடர்பாக ஒரு வருடத்திற்கு இவர் ஆக்கக்குறி தூதுவராக பணியாற்றுவார் என அமைச்சு கூறியுள்ளது.
ஜயந்தி குரு உத்தும்பாலவுக்கு எதிர்வரும் 19 ஆம் திகதி இந்த பதவி வழங்கப்பட உள்ளது.
இதன்படி எதிர்வரும் 19ஆம் திகதி முதல் 2017 ஆகஸ்ட் 19ஆம் திகதி வரை அவர் ஆக்கக்குறி தூதுவராக பதவி வகிப்பார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
எவரஸ்ட் சிகரத்தை தொட்ட முதல் பெண்ணுக்கு தூதுவர் பதவி.....
Reviewed by Author
on
August 17, 2016
Rating:

No comments:
Post a Comment