எரிபொருள் கையிருப்பை உறுதிப்படுத்த நடவடிக்கை: மசகு எண்ணெய் ஏற்றிய கப்பல் இன்று வருகை
மத்திய கிழக்கிலிருந்து ஒன்பதாயிரத்து 750 மெற்றிக் டொன் மசகு எண்ணெயை ஏற்றிய கப்பலொன்று இன்று நாட்டை வந்தடையவுள்ளதாக இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் அறிவித்துள்ளது.
இது குறித்துக் கருத்துத் தெரிவித்த கூட்டுத்தாபனத்தின் முகாமைத்துவப் பணிப்பாளர் மயூர நெத்திகுமாரகே, கடந்த மார்ச் மாதத்திற்குப் பிறகு நாட்டுக்கு வருகை தரும் முதலாவது மசகு எண்ணெய் கப்பல் இதுவெனக் குறிப்பிட்டார்.
தற்போதைய எரிபொருள் கையிருப்பினை உறுதிப்படுத்தும் வகையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதுடன், மற்றுமொரு எரிபொருள் தாங்கிக் கப்பல் இந்த மாத இறுதிக்குள் நாட்டை வந்தடையவுள்ளது.
இதேவேளை, அடுத்த மாத இறுதியில் அமெரிக்காவிலிருந்து மசகு எண்ணெய் ஏந்திய மற்றுமொரு கப்பல் வருகை தரவுள்ளது.
அமெரிக்காவில் மசகு எண்ணெய் ஏற்றும் பணிகள் தற்போது இடம்பெற்று வருவதுடன், அங்கிருந்து இலங்கையை வந்தடைய சுமார் 45 நாட்கள் எடுக்கும் எனவும் முகாமைத்துவப் பணிப்பாளர் மேலும் தெரிவித்துள்ளார்.
Reviewed by Vijithan
on
April 17, 2026
Rating:


No comments:
Post a Comment