முதல் பதக்கம்----ரியோ ஒலிம்பிக்: வெண்கலம் வென்றார் இந்திய வீராங்கனை சாக்ஷி மாலிக்!
ஒலிம்பிக் மகளிர் மல்யுத்தத்தில் இந்திய வீராங்கனை சாக்ஷி மாலிக் வெண்கலப் பதக்கம் வென்றார். இதையடுத்து ரியோ ஒலிம்பிக்கில் இந்தியா தனது முதல் பதக்கத்தை வென்று பதக்கப் பட்டியலில் இடம்பெற்றுள்ளது.
ஒலிம்பிக் மகளிர் மல்யுத்தத்தின் 58 கிலோ எடை ‛பிரீ ஸ்டைல்' பிரிவில் இந்திய வீராங்கனை சாக்ஷி மாலிக், கிர்கிஸ்தான் வீராங்கனை ஐசுலு டைனிபிகோவா உடன் மோதினார்.
பரபரப்பாக நடைபெற்ற இப்போட்டியில் 7-5 என்ற புள்ளிக் கணக்கில் சாக்ஷி வெற்றி பெற்று வெண்கலப் பதக்கம் வென்றார். ரியோ ஒலிம்பிக்கில் இந்தியா வெல்லும் முதல் பதக்கம் இது.
முன்னதாக காலிறுதியில் ரஷ்ய வீராங்கனை விளிரியா கொலாகோவா உடன் நடந்த போட்டியில் தோல்வியடைந்ததால் ரெபிசாஜ் சுற்றில் விளையாடிய சாக்ஷி மாலிக், அச்சுற்றில் மங்கோலிய வீராங்கனை ஒர்ஹான் புர்வித்ஜ்ஜை வீழ்த்தி வெண்கலப் பதக்கத்திற்கான போட்டிக்கு தகுதி பெற்றது குறிப்பிடத்தக்கது.
முதல் பதக்கம்----ரியோ ஒலிம்பிக்: வெண்கலம் வென்றார் இந்திய வீராங்கனை சாக்ஷி மாலிக்!
Reviewed by Author
on
August 18, 2016
Rating:

No comments:
Post a Comment