நா.திருச்செந்தூரனின்(மன்னார் செந்தூரனின்) யாதுமாகி கவிதை நூல் அறிமுக விழா…
பேராதனைப்பல்கலைக்கழக மாணவன் நா.திருச்செந்தூரனின்(மன்னார் செந்தூரனின்) யாதுமாகி கவிதை நூல் அறிமுக விழா இன்று 17-08-2016 புதன்கிழமை மாலை 3-30 மணியளவில் மன்னாரில் YMCA மண்டபத்தில் மிகவும் சிறப்பாக இடம் பெற்றது.
வெளிச்சம் வாழ்வியல் வளர்ச்சி அமைப்பின் அனுசரணையில்
தலைமை-அருட்பணி தமிழ்நேசன் அடிகளார்-ஆசிரியர்-மன்னா பத்திரிகை
சிறப்பு விருந்தினர்கள்
சித்த வைத்திய நிபுணர் வைத்திய கலாநிதி S.லோகநாதன் (தேசபந்து-கீர்த்திஸ்ரீ-வைத்தியபிமாணி-வைத்தியஜோதி பண்டிட்)
திரு.M.சிவானந்தன்-உதவிக்கல்விப்பணிப்பாளர்-வலையக்கல்வி அலுவலகம் மன்னார்
சித்த வைத்திய கலாநிதி S.செல்வமகேந்திரன்-தலைவர் ஆயர்வேத பாதுகாப்புச்சபை-மன்னார்.
கௌரவ விருந்தினராக
திரு.செ.சந்திரக்குமார் (கண்ணன்) தலைவர்-தமிழ்விருட்சம்
கலந்து கொண்டதோடு
நிகழ்வுகளாக அகவணக்கம் மங்களவிளக்கேற்றல் தொடர்ந்து வரவேற்புரையினை பேராதனைப்பல்கலைக்கழக மாணவன் சு.பிரகலாதன் நிகழ்த்த தலைமையுரையினை அருட்பணி தமிழ்நேசன் அடிகளார் நிகழ்த்த
நூல் அறிமுகவுரையை கவிஞர் ந.பிரதீப் நிகழ்த்த
சிறப்பு நிகழ்வாக யாதுமாகி கவிதை நூல் அருட்பணி தமிழ்நேசன் அடிகளார் வெளியீட்டு வைக்க சிறப்பு பிரதியை சித்த வைத்திய நிபுணர் வைத்திய கலாநிதி S.லோகநாதன் பெற்றுக்கொண்டார்கள்.
நூல் ஆய்வுரையினை கலைஞர் மாணிக்கம் ஜெகன் அலசி ஆரய
சிறப்பு கவியரங்கமாக தூர்வாரப்பட்ட உலகில் தூண்டில் போட்டு தேடுவோம் எனும் தலைப்பில் காதல்-கல்வி-கலாச்சாரம்-மனிதம் தலைப்புக்களில் சிறப்பு கவியரங்கம் தமிழ் மாமன்றத்தின் சார்பில் திரு.கஜன் தலைமையில் இடம்பெற்றது.
இறுதியாக நன்றியுரையினையும் ஏற்புரையிலும் தனது முதலாவது
படைப்பான யாதுமாகி கவிதை நூலாக வெளிவர உதவிய அத்தனை உள்ளங்களையும் நினைத்து நன்றிப்பெருக்கோடு நன்றிகள் நவிழ்ந்தார். கவிஞர் நா.திருச்செந்தூரன் இக்கவிதை வெளியீட்டு விழாவிற்கு கவிஞர்கள் கலைஞர்கள் பொதுமக்கள் பலரும் கலந்து சிறப்பித்தனர்.
முதலே பேராதனை பல்கலைக்கழகத்தில் வெளியிடு கண்ட யாதுமாகி கவிதை நூல் இன்று அறிமுகம் செய்துவைக்கப்பட்டது.
நிறைவாக புதிய படைப்புக்களை படைக்கின்றவர்கள் நல்ல முறையில் வாசிக்கவேண்டும் நல்லவற்றை யோசிக்க வேண்டும் புதிய செற்களால் தமிழன்னைக்கு பூமாலையிடவேண்டும் தமிழுக்கு சிறந்த தொண்டாற்றி அடுத்த தலைமுறைக்கு அரோக்கியமான கவிதைகளையும் தழிழையும் கொடுக்க நாம் சிறந்த முறையில் செயலாற்றுவோம்….விருந்தினர்களின் உரையின் சாரம்சமாக அமைந்த விடையம் ,,,,,,
நியூமன்னார் இணையத்திற்காக-வை-கஜேந்திரன் -
நா.திருச்செந்தூரனின்(மன்னார் செந்தூரனின்) யாதுமாகி கவிதை நூல் அறிமுக விழா…
Reviewed by Author
on
August 17, 2016
Rating:
No comments:
Post a Comment