சட்டசபையிலிருந்து ஸ்டாலின் குண்டுகட்டாக வெளியேற்றம்!
தமிழக சட்டப்பேரவையில் இருந்து திமுக எம்எல்ஏக்கள் ஒரு வாரம் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். எதிர்க்கட்சித்தலைவர் மு.க.ஸ்டாலின் அவைக் காவலர்களால் குண்டுகட்டாக வெளியேற்றப்பட்டார்.
தமிழக சட்டப்பேரவையில் இன்று வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை, ததகவல் தொழில்நுட்பவியல் துறை மீதான மானியக்கோரிக்கை விவாதம் நடைபெற்றது. பேரவையில் இருந்து முதல்வர் ஜெயலலிதா கிளம்பிப்போனதும், விவாதங்கள் தொடர்ந்தன.
திருப்பூர் தெற்கு எம்.எல்.ஏ.வான குணசேகரன் தன் பேச்சின் போது, "நமக்கு நாமே என்று கூக்குரல் இட்டவர்கள் எல்லாம் கோட்டையை பிடிக்கமுடியாது" என்று குறிப்பிட, அதை அவைக் குறிப்பிலிருந்து நீக்க தி.மு.க உறுப்பினர்கள் கோரிக்கை வைத்தனர். இதே நேரத்தில், மு.க.ஸ்டாலின் எழுந்து ஒரு கருத்து தெரிவித்தார். ஆனால், அதை அவைக்குறிப்பில் இருந்து சபாநாயகர் தனபால் நீக்கினார்.
அதை எதிர்த்து தி.மு.க உறுப்பினர்கள் நீண்ட நேரமாக குரல் கொடுக்க... அவர்களை அவையை விட்டு கூண்டோடு வெளியேற்றும்படி அவை காவலர்களுக்கு உத்தரவிட்டார். அதன்படி, தி.மு.க உறுப்பினர்கள் வெளியேற்றப்பட்டனர். ஒருவாரம் அவர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். சட்டசபை இன்று இத்தோடு ஒத்திவைக்கப்பட்டது.
சட்டசபையிலிருந்து ஸ்டாலின் குண்டுகட்டாக வெளியேற்றம்!
Reviewed by Author
on
August 17, 2016
Rating:

No comments:
Post a Comment