அண்மைய செய்திகள்

recent
-

சரித்திர ரீதியான பல பிழைகள் பிரச்சினைகளை ஏற்படுத்துகின்றன (உண்மை புலப்பட வேண்டும் - முதலமைச்சர்)


ரீதியாக பிழையான எண்கணியங்களையும் தகவல்களையும் வைத்துக் கொண்டிருப்பதனால் தான் எம் மக்களிடையே சில பிரச்சினைகள் ஏற்படுகின்றன என சுட்டிகாட்டிய வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன், நாம் உணர்ச்சி பூர்வமான அரசியலில் ஈடுபட்டு வருகிறோம் எனவும் தெரிவித்தார்.

நல்லை கந்தனின் இருபத்தி நான்காவது நூல் வெளியீட்டு விழா நேற்றைய தினம் நாவலர் கலாசார மண்டபத்தில் யாழ்.மாநகர சபை ஆணையாளர் பொ.வாகீசன் தலைமையில் நடைபெற்றது. இதன்போது பிரதம விருந்தினராக கலந்து கொண்டு உரையாற்றும் போதே முதலமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.இன்று கொழும்பில் நாம் செல்லும் போது சற்றே விட்டுக் கொடுக்கலாமே அனைவருமே இசைந்து தானே செல்கின்றனர் நீங்கள் மட்டும் ஏன் விடாப்பிடியாக நிற்கின்றீர்கள் என கேட்கின்றார்கள் சிங்கள நண் பர்கள்.


அவர்களுக்கு நாம் கூறும் பதில், எங்களுடைய உரிமைகளை எங்களுக்கு தேவையானவற்றை உண்மையை எடுத்து கூறுகின்றோம். நீங்கள் அதனை தவறாக விளங்கி கொண்டால் அதற்கு நாங்கள் பொறுப்பல்ல என கூறிவருகின்றேன். எமது தனித்துவமான மனித இயல்பையும் மனித வளத்தினையும் பாவிக்க வேண்டும். எமது அறிவினைப் பாவிக்க வேண்டும். அந்த வகையில்,

எமது இளைஞர்கள் தமது வகிபாகத்தினை வேறு விதமாக செயற்படுத்திக்கொள்ள வேண்டும் அல்லது அதற் கான திட்டங்களை வகுத்துக் கொள்ள வேண்டும். இன்றைய தினம் (நேற்று) என்னுடன் கிழக்கு மாகாண ஆளுநர் அஸ்ரின் பெர்னாண்டோ விமானத்தில் பயணம் செய்யும் போது, வடக்கு கிழக்கினை இணைப்பதற்கு கேட்கின்றீர்கள் ஆனால் அது எவ்வாறு முடியுமென்றும், சிங்கள மக்கள் காலாதிகாலமாக கிழக்கு மாகாணத்தில் வாழ்ந்து வந்துள்ளதாக எண்ணுகின்றார்கள்.

அந்தவகையில், வடகிழக்கு இணைப்பினை நினைப்பது தவறு என குறிப்பிட்டார். அதற்கு பதிலளிக்கும் போது, வரலாற்று ரீதியாக வடகிழக்கில் தமிழ் மொழி தான் பரம்பரையாக பேசப்பட்டது. அதில் எந்தவித சந்தேகமும் இருக்க முடியாது என்றேன். கிழக்கு மாகாணத்தில் பௌத்த சின்னங் கள் இருக்கின்றன என அவர் மீண்டும் என்னிடம்கேட்ட போது, 2ஆம் மற்றும் 3 ஆம் நூற்றாண்டு காலங்களில் தமிழர்கள் பௌத்தர்களாக மாற்றப்பட்டனர்.

அதனால் தான் பௌத்த சின் னங்கள் உருவாக்கப்பட்டன. ஆகவே கிழக்கு மாகாணத்தை எவ்வாறு சிங்கள மக்களின் இடமென கூறுவீர்கள் என கேட்டதற்கு அவர் பதிலளிக்கவில்லை. சரித்திர ரீதியாக பல பிழையான தகவல்களையும் எண்ணங்களையும் வைத்துக்கொண்டிருப்பதனால் எமது மக்களிடையே சில பிரச்சினைகள் ஏற்படுகின்றன.

சரித்திர ரீதியாக உலக ஆராய்ச்சி யாளர்களை அழைத்து ஆராய்ந்து பார்ப்போம் என குறிப்பிட்டதற்கு அது நடக்கிற காரியமா என அவர் பதிலளித்தார். இவ்வாறு நடைபெற்று எமது மக்களுக்கு உண்மை புலப்பட்டால் மாத்திரமே பிரச்சினைக்கு தீர்வுகாண முடியுமென அவருக்கு கூறி வைத்தேன்.
ஆகவே, நாம் உணர்ச்சிபூர்வமாக அரசியலில் ஈடுபட்டு வருகின்றோம்.

உணர்ச்சி பூர்வ மான சூழலில், யார் பெரிது என கேள்விகள் எழுகின்ற போதுதான் யார் யார் எங்கு இருக்கின்றார்களோ அவர்களுக்கு இருக்கும் உரித்துக்கள் என்ன என்பதை சர்வதேச ரீதியான உடன்பாடுகள் குறிப்பிடுகின்றன இதனை சிந்திக்காது வெறுமனவே, உணர்ச்சி பூர்வமாக சிந்திப்பதனால் தான் எமது அரசியல் இந்த நிலைமைக்கு வந்துள்ளது.

ஆகவே எந்தள விற்கு எம்மால் தியாகங்களை செய்ய முற்படுவோம்.அந்தளவிற்கு எமது வருங்கால சந்ததி சிறப்பாக இருக்கும் என முதலமைச்சர் மேலும் தெரிவித்தார்.
சரித்திர ரீதியான பல பிழைகள் பிரச்சினைகளை ஏற்படுத்துகின்றன (உண்மை புலப்பட வேண்டும் - முதலமைச்சர்) Reviewed by NEWMANNAR on August 25, 2016 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.