அண்மைய செய்திகள்

recent
-

இந்த காலத்தில் கூட தமிழர் நிலம் பறிபோகின்றன!!


இந்த நல்லாட்சி காலத்தில் கூட தமிழ் மக்களின் நிலங்கள் பறிபோயுள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன் தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பு மாவட்டத்தின் படுவான்கரை பிரதேசத்தின் பண்டைய கிராமங்களில் ஒன்றாக கருதப்படும் அம்பிலாந்துறையை சேர்ந்த முருகுதயாநிதி எழுதிய 'அம்பிலாந்துறை' நூல் வெளியீட்டு நிகழ்வு நேற்று (21) அம்பிலாந்துறையில் நடைபெற்றது.

இந்த நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

இங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர்,

வெள்ளையருடன் போர்கள் இடம்பெற்றபோது அதற்கான பங்களிப்பினை அந்த காலத்தில் அம்பிலாந்துறையில் இருந்தும் வழங்கப்பட்டுள்ளது.

ஒருநாட்டின் வரலாறு என்பது,ஒரு சமூகத்தின் வரலாறு என்பது அந்த வரலாற்றில் உள்ள மக்களை வைத்தே ஆய்வுசெய்யப்படவேண்டும்.

வரலாற்று ரீதியான, மரபுரீதியான, கலாசார ரீதியான பல விடயங்கள் இல்லாமல் சென்றுகொண்டிருக்கின்றன.

இந்தவேளையில் எங்களை நாங்கள் அறியவேண்டும்.அதற்காக வரலாற்று நூல்களை வெளிக்கொணரவேண்டிய தேவையுள்ளது.நாங்கள் வரலாறு தெரியாதவர்களாக இருப்போமானால் எங்களது வரலாறு மறைக்கப்படும்,அதனை இன்னொரு இனம் மறைக்கும் நிலையும் ஏற்படும் எனவும் குறிப்பிட்டார்.

இன்று எமது அடிப்படை அரசியல் பிரச்சினை என்பதும் அடிப்படை வரலாறு என்பதும் தமிழ் மக்களிடம் பின்னிப்பிணைந்துள்ளது.

இங்குள்ள பிரச்சினையென்பது சர்வதேச மயப்படுத்தப்பட்டநிலையில் இருக்கின்றது. மட்டக்களப்பு மாவட்டத்தில் ஆதியான கிராமமாக இந்த அம்பிலாந்துறை பார்க்கப்படுகின்றது.எந்த கிராமத்திற்கும் இல்லாத சிறப்பு இந்த அம்பிலாந்துறைக்கு உள்ளது' முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன் குறிப்பிட்டுள்ளார்.

இந்த காலத்தில் கூட தமிழர் நிலம் பறிபோகின்றன!! Reviewed by Author on August 22, 2016 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.