கிழக்கு மாகாணத்தில் ஆசிரியர் போட்டி பரீட்சையில் 74 வீதமானோர் சித்தியடையவில்லை!
கிழக்கு மாகாண பாடசாலைகளில் நிலவும் கணிதம், விஞ்ஞானம் மற்றும் ஆங்கில ஆசிரியர்கள் வெற்றிடங்களை நிரப்புவதற்கான தெரிவுப் பரீட்சையில் 74 வீதமானோர் சித்தி பெறவில்லை என கிழக்கு மாகாண கல்வி அமைச்சர் சி.தண்டாயுதபாணி கவலை வெளியிட்டுள்ளார்.
மட்டக்களப்பு, கரடியனாறு மகிழவட்டுவான் ஆகிய இடங்களிலுள்ள மாகாண பாடசாலைகளில் தொழில்நுட்ட ஆய்வு கூடங்களை இன்று திறந்து வைத்து உரையாற்றிய அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
தொடர்ந்தும் உரையாற்றிய அவர், கணிதம், விஞ்ஞானம் மற்றும் ஆங்கிலம் ஆகிய பாடங்களுக்கு பட்டதாரிகளை தெரிவு செய்வதற்கு மேற்கொள்ளப்பட்ட முயற்சிகள் எதிர்பார்த்த பலனை தரவில்லை.
கிழக்கு மாகாண பாடசாலைகளில் கணிதம், விஞ்ஞானம் மற்றும் ஆங்கிலம் ஆகிய பாடங்களுக்கான 1134 வெற்றிடங்களை நிரப்புவதற்காக தகுதியுடைய பட்டதாரிகளிடமிருந்து விண்ணப்பங்கள் கோரப்பட்டன.
1500 விண்ணப்பங்கள் கிடைத்தன. போட்டிப் பரீட்சையில் 390 பேர் மட்டுமே தெரிவுக்குரிய தகுதியை பெற்றிருக்கின்றனர்.
கிழக்கு மாகாணத்திலுள்ள வெற்றிடங்களை கருத்தில் கொண்டு இந்நியமனம் தொடர்பான நியதிகளில் சில தளர்வுகள் தேவை என மத்திய அரசை மாகாண கல்வி அமைச்சு கேட்டுள்ளது.
இதேவேளை, கிழக்கு மாகாண பாடசாலைகளில் தமிழ் ஆசிரியர்களுக்கான பற்றாக்குறை தொடர்ந்தும் அதிகரிப்பதற்கான வாய்ப்புகள் காணப்படுகின்றன.
இதனால் கல்வியல் கல்லூரிகளில் டிப்ளோமா சான்றிதழ் பெற்று வெளியேறும் தமிழ் ஆசிரியர்களின் எண்ணிக்கையும் வீழ்ச்சியடைந்து வருவதாகவும் அவர் தெரித்துள்ளார்.
யுத்தம் காரணமாக ஏற்பட்ட பாதிப்பு, வெளிநாடுகளுக்கு புலம்பெயர்வு மற்றும் கல்வியில் ஆர்வம் இன்மை போன்றவை இதற்கு பிரதான காரணங்கள் என கண்டறியப்பட்டுள்ளது என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
கிழக்கு மாகாணத்தில் ஆசிரியர் போட்டி பரீட்சையில் 74 வீதமானோர் சித்தியடையவில்லை!
Reviewed by Author
on
September 02, 2016
Rating:

No comments:
Post a Comment