சாதனை பெண் காஞ்சனா தீக்குளிக்க முயன்றதற்கு இது தான் காரணம்..! பரபரப்பு தகவல்
கடந்த 2ம் திகதி தமிழக சட்டப்பேரவை கூட்டம் நடந்து கொண்டிருக்கும்போது தலைமைச் செயலகத்தில் திருவொற்றியூர் இன்ஸ்பெக்டர் காஞ்சனா தீக்குளிக்க முயற்சி செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
தற்போது, காஞ்சனாவின் தற்கொலை முயற்சிக்கு காவல்துறை கூறும் காரணம் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து பெயரைக் குறிப்பிட விரும்பாத உயரதிகாரி ஒருவர் கூறுகையில்,
காஞ்சனா, தண்டையார்பேட்டையில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் குடியிருந்து திருவொற்றியூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் இன்ஸ்பெக்டராக பணியாற்றினார். அங்கு பிரச்னைகள் ஏற்பட காஞ்சனா பொருளாதார குற்றப்பிரிவுக்கு மாற்றப்பட்டார்.
இன்ஸ்பெக்டர் காஞ்சனா காரியத்திலும் துணிச்சலுடன் செயல்படுவார். இதுவே அவரது இடமாறுதலுக்கு முக்கிய காரணமாக அமைந்தது. அப்படி தான் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு திருவொற்றியூருக்கு வந்தார்.
அங்கே உள்ள இன்னொரு பொலிஸ் இன்ஸ்பெக்டருக்கும், காஞ்சனாவுக்கும் பணி மோதல் ஏற்பட்டுள்ளது. அந்த இன்ஸ்பெக்டர் காஞ்சனாவுக்கு பலவகையில் தொந்தரவு கொடுத்துள்ளார்.
காஞ்சனாவின் ஜீப்பை எடுக்க விடாமல் தடுத்ததாகவும் அவர் மீது குற்றச்சாட்டுள்ளது. இதனால் சொந்த வாகனத்தைப் காஞ்சனா பயன்படுத்தினார். அதற்கும் சில இடையூறுகளை அந்த இன்ஸ்பெக்டர் செய்துள்ளார். இவ்வாறு பலவகையில் இடையூறு செய்த அந்த இன்ஸ்பெக்டரால் காஞ்சனா மனஉளைச்சலுக்குள்ளாகி தற்கொலைக்கு முயன்றுள்ளார்.
காஞ்சனாவுக்கு சக பொலிஸ் அதிகாரியால் தொந்தரவு என்றால் அவர், உயரதிகாரிகளிடம் புகார் கொடுக்கலாம். அதற்காக தற்கொலைக்கு முயன்று காவல்துறையின் மீது களங்கத்தை ஏற்படுத்தலாமா. அவரது செயலுக்கு நிச்சயம் நடவடிக்கை எடுக்கப்படும்"என கூறியுள்ளார்.
சாதனை பெண் காஞ்சனா தீக்குளிக்க முயன்றதற்கு இது தான் காரணம்..! பரபரப்பு தகவல்
Reviewed by Author
on
September 06, 2016
Rating:

No comments:
Post a Comment