மன்னாரில் அரசியலமைப்பு சீர் திருத்தம் தொடர்பாக கலந்துரையாடல்----படம்
மன்னாரில் 'அரசியலமைப்பு சீர் திருத்தம் தொடர்பாக பொது மக்கள் கருத்தறிக்குழுவின் மூலம் வெளியிடப்பட்டுள்ள அறிக்கை தொடர்பான கலந்துரையாடல்
'அரசியலமைப்பு சீர்திருத்தம் தொடர்பாக பொது மக்கள் கருத்தறிக்குழுவின் மூலம் வெளியிடப்பட்டுள்ள அறிக்கை தொடர்பான கலந்துரையாடல் இன்று செவ்வாய்க்கிழமை(6) மாலை 3 மணியளவில் மன்னார் நகரசபை மண்டபத்தில் அரசியலமைப்பு மாற்றத்திற்கான பிரஜைகளின் முயற்சி அமைப்பின் ஏற்பாட்டில் இடம் பெற்றது.
சட்டத்தரணி லால் விஜேநாயக்க அவர்களின் தலைமையில் அரசியலமைப்புச் சீர்திருத்தம் தொடர்பான பொதுமக்கள் கருத்தறிக்குழு நாட்டின் அனைத்துப் பிரதேசங்களும் உள்ளடங்கும் வகையில் பொது மக்களின் கருத்தாலோசனைகளை பெற்று வந்தது.
இதனை அடிப்படையாக கொண்டு பொது மக்களின் கருத்தாலோசனைகளும், குழுவின் பரிந்துரைகளும் உள்ளடங்கிய அறிக்கை கடந்த காலங்களில் வெளியிடப்பட்டுள்ளது.
குறித்த கருத்தாலோசனைகளும், பரிந்துரைகளும் உள்ளடங்கிய அறிக்கை அரசியலமைப்பு சீர் திருத்தக்குழுவிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
குறித்த அறிக்கை தொடர்பில் விளக்கமளிக்கும் கலந்துரையாடல் ஒன்று இன்று செவ்வாய்க்கிழமை மாலை மன்னார் நகர சபை மண்டபத்தில் இடம் பெற்றது.
-குறித்த கலந்துரையாடலில் சட்டத்தரணி எஸ்.ஜீ.புஞ்சிஹேவா மற்றும் லயனல் குருகே ஆகியோர் கலந்து கொண்டு குறித்த அறிக்கை தொடர்பில் உரை நிகழ்த்தினர்.
குறித்த கலந்துரையாடலில் அரசியல் பிரமுகர்கள்,பெண்கள் அமைப்பின் பிரதி நிதிகள்,பொது அமைப்பினர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.


மன்னாரில் அரசியலமைப்பு சீர் திருத்தம் தொடர்பாக கலந்துரையாடல்----படம்
Reviewed by Author
on
September 06, 2016
Rating:

No comments:
Post a Comment