நான்காவது நாளாக தொடரும் போராட்டம் - உண்ணாவிரதத்தில் குதித்த மாணவிகள்....
யாழ்ப்பாணம் உடுவில் மகளிர் கல்லூரி மாணவிகளின் கவனயீர்ப்புப் போராட்டம் நான்காவது நாளாக இன்றும் முன்னெடுக்கப்படுகின்றது.
தற்போது கல்லூரி அதிபராக பதவி வகித்து வரும் சிரானி மில்ஸின் பதவிக் காலத்தை நீடிக்க வேண்டும் என வலியுறுத்தியே இந்த மாணவிகள் போராட்டத்தை மேற்கொண்டுள்ளனர்.
தமது கவனயீர்ப்புப் போராட்டத்தை யாரும் கண்டுகொள்ளாத நிலையில் நேற்று இரவு முதல் உண்ணாவிரதத்தையும் ஆரம்பித்துள்ளார்கள்.
இரவு பகலாக தொடரும் இந்த மாணவிகளின் போராட்டத்தின்போது ஒரு மாணவி இன்று காலை மயங்கி விழுந்துள்ளதுடன் மேலும் பல மாணவிகளின் உடல் நிலை பாதிக்கப்பட்டுள்ளது.
இவர்கள் ஆரம்பித்துள்ள இந்த உண்ணாவிரதப்போராட்டமானது தமக்கான தீர்வு கிடைக்கும் வரை காலவரையற்று தொடரும் என எச்சரித்தார்கள்.
உடுவில் மகளிர் கல்லூரி மாணவிகள் முன்னெடுத்துள்ள இந்த போராட்டமானது பாரதூரமானதாக மாறிவருவதோடு, இதனால் குறித்த பகுதியில் பதற்ற நிலை காணப்படுகின்றது, இவர்களுடைய போராட்டத்திற்கு பெற்றோர்களும் பழைய மாணவிகளும் கூட ஆதரவு வழங்கி வருகின்றனர்.
இந்த மாணவிகளை பார்வையிடுவதற்கு வடமாகாண கல்விப்பணிப்பாளர் எஸ்.உதயகுமார் சென்றுள்ளார்.
மாணவிகளுடன் கலந்துடையாடிவிட்டு பிரதான நுழைவாயில் ஊடாக பாடசாலையை விட்டு செல்ல முட்பட்டுள்ளார். எனினும் பாடசாலை மாணவிகள் அவரை செல்லவிடாமல் தடைசெய்துள்ளனர்.
இதனால் குறித்த பகுதியில் மேலும் பதற்றம் நிலவியுள்ளது. இதைத் தொடர்ந்து வடமாகாண ஆளுநரின் செயலாளர் இளங்கோவன் வரைந்து உரிய தீர்வு வழங்கப்படும் என்று உறுதி மொழியளித்துள்ளார்.
எனினும் உரிய பதில் தமக்கு எழுத்து மூலம் அறிவிக்கப்படவேண்டும் என்றும் உடனடி தீர்வு கிடைக்கவேண்டும் என்றும் உடுவில் மகளிர் கல்லூரி மாணவிகள் தெரிவிக்கின்றனர்.
நான்காவது நாளாக தொடரும் போராட்டம் - உண்ணாவிரதத்தில் குதித்த மாணவிகள்....
Reviewed by Author
on
September 06, 2016
Rating:

No comments:
Post a Comment