அண்மைய செய்திகள்

recent
-

மன்னார் பிரதேச சபையால் கர்ப்பிணித்தாய்மார்களுக்கு சத்துணவு வழங்கி வைப்பு(படம்)


மன்னார் பிரதேச சபையின் 2016 ம் ஆண்டு வரவு செலவு திட்ட ஒதுக்கீடுகளுக்கு அமைவாக இன்று செவ்வாய்க்கிழமை(6) மன்னார் பிரதேச சபை பிரிவுக்குற்பட்ட  34 கர்பிணித் தாய்மார்களுக்கு தலா 3,628 ரூபாய் பெறுமதியான சத்துணவுப் பொதிகள் வழங்கும் வைபவம்   மன்னார் பிரதேச சபையின் செயலாளர்  இராசையா தயாபரன் தலைமையில் நடை பெற்றது.

குறித்த நிகழ்வில் மன்னார் மாவட்ட உள்ள10ராட்சி உதவி ஆணையாளர், மன்னார் பிரதேச சபை உப அலுவலக பொறுப்பதிகாரிகள் மற்றும் பிரதேச சபை உத்தியோகத்தர்கள் கலந்து கொண்டு சிறப்பித்ததுடன், சத்துணவு பொதிகளும் வழங்கிவைக்கப்பட்டது.

மன்னார் பிரதேச சபையின் கீழ் உள்ள 34 கிராமங்களில் இருந்து குறைந்த வருமானமுடைய தலா ஒரு கற்;பிணித்தாய் என்ற அடிப்படையில் மன்னார் சுகாதார வைத்திய அதிகாரியால் தெரிவு செய்யப்பட்டு, வழங்கப்பட்ட பட்டியலிற்கு அமைய குறித்த சத்துணவு பொதிகள் மன்னார் பிரதேச சபையால் வழங்கிவைக்கபட்டமை குறிப்பிடத்தக்கது.
 





மன்னார் பிரதேச சபையால் கர்ப்பிணித்தாய்மார்களுக்கு சத்துணவு வழங்கி வைப்பு(படம்) Reviewed by Author on September 06, 2016 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.