உலகின் பழமையான கிரிக்கெட் வீரர் லிண்ட்சே டக்கேட் காலமானார்,,,,,
தென் ஆப்பிரிக்காவைச் சேர்ந்த முன்னாள் கிரிக்கெட் வீரர் லிண்ட்சே டக்கேட்(Lindsay Tuckett) உடல்நிலை சரியில்லாமல் காலமானார்.
தென் ஆப்பிரிக்காவில் Bloemfontein நகரைச் சேர்ந்தவர் லிண்ட்சே டக்கேட் (97).
உலகிலேயே மிகவும் பழமையான கிரிக்கெட் வீரரான லிண்ட்சே, 1947-ம் ஆண்டு நாட்டிங்காமில் நடைபெற்ற போட்டியில் அறிமுகமானார்.
முதல் இன்னிங்சில் 37 ஓவர்கள் வீசி 68 ஓட்டங்கள் விட்டுக் கொடுத்து 5 விக்கெட்டுகளை வீழ்த்தி சாதனை படைத்துள்ளார்.
இதைத் தொடர்ந்து, இவர் 1947 முதல் 1949 வரையிலான காலகட்டத்தில் இங்கிலாந்து அணிக்கு எதிராக 9 டெஸ்ட் போட்டிகள் விளையாடியுள்ளார்.
மேலும், டக்கெட் சிறந்த வேகப்பந்து வீச்சாளர் என்பதால் தனது அணியின் முதுகெலும்பாக திகழ்ந்தவர்.
தன்னுடைய ஒட்டுமொத்த சர்வதேச கிரிக்கெட் வரலாற்றில் மொத்தம் 19 விக்கெட்டுக்களை எடுத்துள்ளார். இதில் இரண்டு முறை தொடர்ந்து 5 விக்கெட்டுக்களை வீழ்த்தியுள்ளார்.
இந்நிலையில் இவருக்கு 20 வயதாக இருக்கும் பொழுது வெடித்த இரண்டாம் உலகப் போரின் காரணமாக தொடர்ந்து கிரிக்கெட்டில் இடம்பெற முடியாத நிலையை அடைந்தார்.
இதுகுறித்து தென் ஆப்பிரிக்கா கிரிக்கெட் அமைப்பின் தலைமை நிர்வாக அதிகாரி Haroon Lorgat கூறுகையில், நான் மற்றும் தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அமைப்பின் சார்பாக அவரது குடும்பத்திற்கு எங்களது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறோம் என கூறியுள்ளார்.
உலகின் பழமையான கிரிக்கெட் வீரர் லிண்ட்சே டக்கேட் காலமானார்,,,,,
Reviewed by Author
on
September 06, 2016
Rating:

No comments:
Post a Comment