மன்னார் மாவட்டத்தில் வாழ்வின் எழுச்சி அபிவிருத்தி உத்தியோகத்தர் பதவிக்கு விண்ணப்பித்த விண்ணப்பதாரிகளின் விண்ணப்பங்கள் நிராகரிப்பு தொடர்பில் உடன் நடவடிக்கை-அமைச்சர் கபீர் காசீம்.
வாழ்வின் எழுச்சி அபிவிருத்தித் திணைக்களத்தில் 'வாழ்வின் எழுச்சி அபிவிருத்தி உத்தியோகத்தர்' தரம் 3 இற்கு ஆட்சேர்த்து கொள்ளுவதற்காக மன்னார் மாவட்டத்தில் இருந்து விண்ணப்பித்த பல்வேறு விண்ணப்பதாரர்களின் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டமை மற்றும் பல விண்ணப்பதாரிகளுக்கு பரிட்சைக்கான அனுமதி அட்டைகள் கிடைக்கப்பெறாமை குறித்து அரச தொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சர் கபீர் காசீமின் கவனத்திற்குகொண்டு சென்ற நிலையில் குறித்த பிரச்சினைகள் குறித்து உடனடியாக நடவடிக்கைகளை மேற்கொள்ளுவதாக அமைச்சர் உறுதியளித்துள்ளதாக ஐக்கிய தேசியக்கட்சியின் மன்னார் மாவட்ட அமைப்பாளர் ஏ.சமீயூ முஹம்மது பஸ்மி தெரிவித்தார்.
வாழ்வின் எழுச்சி அபிவிருத்தித் திணைக்களத்தில் 'வாழ்வின் எழுச்சி அபிவிருத்தி உத்தியோகத்தர்' தரம் 3 இற்கு ஆட்சேர்த்து கொள்ளுவதற்காக மன்னார் மாவட்டத்தில் இருந்து படித்த இளைஞர் யுவதிகள் என சுமார் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் விண்ணப்பித்துள்ளனர்.
கடந்த ஜனவரி மாதம் விண்ணப்பம் கோரப்பட்ருந்த நிலையில் பெப்ரவரி மாதம் 19 ஆம் திகதி விண்ணப்ப முடிவுத்திகதியாக அறிவிக்கப்பட்டு,பின் மேலும் விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் வழங்கப்பட்டிருந்தது.
-இந்த நிலையில் மன்னார் மாவட்டத்தைச் சேர்ந்த பல நூற்றுக்கணக்கான இளைஞர் யுவதிகள் குறித்த பதவிக்கு விண்ணப்பித்திருந்தனர்.
-விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரிகள் பரிட்சை கட்டணமாக 500 ரூபவினை வாழ்வின் எழுச்சி அபிவிருத்தி திணைக்களத்தின் நிதி சேகரிப்பு கணக்கில் வைப்பிலிட்டு பற்றுச்சீட்டுக்களையும் அனுப்பி வைத்துள்ளனர்.
மேலும் குறித்த விண்ணப்பங்கள் பரிசீலினை செய்யப்பட்டு போட்டி பரிட்சைக்கு அனுமதி வழங்குவதற்கு முன் வாழ்வின் எழுச்சி அபிவிருத்தித் திணைக்களத்தினால் மன்னாரில் போட்டி பரிட்சைக்கான கருத்தரங்குகள் கட்டணம் பெற்றுக்கொள்ளப்பட்டு விண்ணப்பதாரிகளுக்கு நடாத்தப்பட்டுள்ளது.
இந்த நிலையில் சுமார் 7 மாதங்கள் கழிந்த நிலையில் விண்ணப்பதாரிகளுக்கு போட்டிப்பரிட்சைக்கான கடிதம் வாழ்வின் எழுச்சி அபிவிருத்தித் திணைக்களத்தினால் அனுப்பப்பட்டு வருகின்றது.
குறித்த கடிதத்தில் பலரது விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளதாக பாதீக்கப்பட்ட விண்ணப்பதாரிகள் விசனம் தெரிவித்தள்ளனர்.
எதிர்வரும் 18 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை போட்டிப்பரீட்சைகள் இடம் பெறவுள்ள நிலையில் பலரது விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டும்,பலருக்கு பரிட்சைக்கான அனுமதி அட்டைகள் அனுப்பப்படாமலும் உள்ளது. நிராகரிக்கப்பட்ட விண்ணப்பதாரர்களின் விண்ணப்பப்படிவத்தில் 4 காரணங்கள் குறிப்பிடப்பட்டு அதில் ஒரு காரணத்திற்காக நிராகரிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
குறிப்பிட்ட கல்வித்தகமையை பூர்த்தி செய்யவில்லை, 35 வயதை தாண்டியிருத்தல், குறிப்பிட்டிருந்த பரீட்சைக்கட்டணம் செலுத்தப்படாமல் காணப்பட்டமை,மற்றும் கல்விச்சான்றிதல்களின் பிரதிகள் சமர்ப்பிக்கப்படாமை போன்ற 4 காரணங்கள் குறிப்பிடப்பட்டு புள்ளடி இடப்பட்டு விண்ணப்பதாரிகள் பலருக்கு விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டுள்ளதாக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
-மேலும் சகல தகமைகளும் உள்ள பலரது விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டுள்ளமை குறித்த விண்ணப்பதாரிகள் கவலையடைந்துள்ளனர்.
இந்த நிலையில் குறித்த பிரச்சினை குறித்து பாதீக்கப்பட்ட விண்ணப்பதாரிகள் ஐக்கிய தேசியக்கட்சியின் மன்னார் மாவட்ட அமைப்பாளர் ஏ.சமீயூ முஹம்மது பஸ்மியின் கவனத்திற்கு கொண்டு சென்றனர்.
-இந்த நிலையில் அவர் உடனடியாக ஐக்கிய தேசியக்கட்சியின் பொதுச் செயலாளரும்,அரச தொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சருமான கபீர் காசீமின் கவனத்திற்கு கொண்டு சென்றார்.
இந்த நிலையில் தான் விண்ணப்பதாரிகள் எதிர் நோக்கும் குறித்த பிரச்சினைகள் குறித்து பிரதமர் ரணில் விக்கிரமசிங்க,அமைச்சர் எஸ்.பி.திஸாநாயக்க,பிரதி அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க ஆகியொரின் கவனத்திற்கு உடனடியாக கொண்டு சென்று உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளுவதாக அமைச்சர் கபீர் காசீம் உறுதியளித்தள்ளதாக ஐக்கிய தேசியக்கட்சியின் மன்னார் மாவட்ட அமைப்பாளர் ஏ.சமீயூ முஹம்மது பஸ்மி மேலும் தெரிவித்தார்.
மன்னார் மாவட்டத்தில் வாழ்வின் எழுச்சி அபிவிருத்தி உத்தியோகத்தர் பதவிக்கு விண்ணப்பித்த விண்ணப்பதாரிகளின் விண்ணப்பங்கள் நிராகரிப்பு தொடர்பில் உடன் நடவடிக்கை-அமைச்சர் கபீர் காசீம்.
Reviewed by NEWMANNAR
on
September 15, 2016
Rating:

No comments:
Post a Comment