மன்னார் மாவட்டத்தின் ஓய்வுபெற்ற ஆசிரியை திருமதி.சாந்தி வாமதேவா(B.ed) அவர்களுக்கு விருது……
மன்னார் மாவட்டத்தின் ஓயவுபெற்ற ஆசிரியை திருமதி.சாந்தி வாமதேவா(B.ed) அவர்களுக்கு விருதும் சான்றிதழும் வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளார்.
மன்னார் புனித சவேரியார் ஆண்கள் தேசிய கல்லூரியின் முன்னாள் ஆசிரியை திருமதி.சாந்தி வாமதேவா(B.ed) அவர்களுக்கு கொழும்பு றோயல் கல்லூரியின் 2015-2016ஆண்டிற்கான “விம்பம்” நாடகப்பிரதி எழுதுதல் போட்டியில் அகிலஇலங்கை ரீதியில் 3ம் இடத்தினை வெற்றிகொண்டு 04-10-2016 அன்று அதற்கான விருதினையும் சான்றிதழையும் பெற்றுக்கொண்டார்.
அத்தோடு 2015 யாழ் நல்லூர் துர்க்கா மணிமண்டபத்தில் நடைபெற்ற 31-07-2015-02-08-2015 3நாட்கள் நடைபெற்ற "இந்து ஆராச்சி மாநாட்டில்" அகில இலங்கை இந்துமாமன்றத்தின் வைரவிழா மலரான "இந்து ஒளி" வெளியிடப்பட்டது அதிலும் தனது கட்டுரையை எழுதியதோடு இவ்விழாவில் கட்டுரையை வாசித்தும் சிறப்புப்பரிசினையும் பெற்றுக்கொண்டார்.
இவ்விழாவில் பிரதமவிருந்தினராக வடக்குமாகாண முதலமைச்சர் மாண்புமிகு நீதியரசர் சி.வி.விக்னேஸ்வரன் ஐயா அவர்களும் மதிப்பிற்குரிய குருக்களும் கலந்து சிறப்பித்மை குறிப்பிடத்தக்கது.
ஆசிரியை திருமதி.சாந்தி வாமதேவா(B.ed) அவர்களை நியூமன்னார் இணையக்குழுமமும் வாழ்த்தி நிற்கின்றது…..

மன்னார் மாவட்டத்தின் ஓய்வுபெற்ற ஆசிரியை திருமதி.சாந்தி வாமதேவா(B.ed) அவர்களுக்கு விருது……
Reviewed by Author
on
October 17, 2016
Rating:

No comments:
Post a Comment