அண்மைய செய்திகள்

recent
-

வடமாகாண சபைக்கும் மத்திய அரசாங்கத்திற்கும் இடையில் ஒரு நல்ல இணக்கப்பாடு ஏற்பட வேண்டும்-மன்னாரில் கல்வி இராஜாங்க அமைச்சர் வி.இராதாகிருஸ்ணன்.-Photos

பொருளாதாரத்தை உயர்த்தக்கூடிய வகையிலே இன்றைய புதிய அரசாங்கம் பல்வேறு திட்டங்களை இந்த நாட்டிற்கும்,எல்லா மாவட்டங்களுக்கும் அறிமுகப்படுத்துகின்ற நேரத்தில் மன்னார் மாவட்டத்திலும் பல்வேறு அபிவிருத்தி திட்டங்களை மேற்கொள்ளுவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

மாகாண சபையூடாக குறித்த திட்டங்களை முன்னெடுப்பதற்கான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.வடமாகாண சபைக்கும் மத்திய அரசாங்கத்திற்கும் இடையில் ஒரு நல்ல இணக்கப்பாடு ஏற்பட வேண்டும் என்பதனை நான் ஞாபகப்படுத்த விரும்புகின்றேன் என கல்வி இராஜாங்க அமைச்சர் வி.இராதாகிருஸ்ணன் தெரிவித்தார்.


மத்திய கல்வி அமைச்சினால் மன்னார்-அல்-அஸ்ஹர் ம.வி தேசிய பாடசாலையில் அமைக்கப்பட்ட தொழில் நுற்ப ஆய்வு கூடம் நேற்று வெள்ளிக்கிழமை(7) மாலை திறந்து வைக்கப்பட்ட நிலையில் அங்கு உரையாற்றுகையிலேயே அமைச்சர் அவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் உரையாற்றுகையில்,,,,,

வடமாகாணத்தில் உள்ள 5 மாவட்டங்களைச் சேர்ந்த பாடசாலைகளை அபிவிருத்தி செய்வதற்கான நடவடிக்கைகளில் கல்வி அமைச்சு ஈடுபட்டு வருகின்றது.அதிலே மன்னார் மாவட்டமும் உள்ளடங்குகின்றது.

மன்னார் மாவட்டம் பொதுவாக ஒரு பின் தங்கிய மாவட்டம் என்பது அனைவரும் அறிந்தது.

இங்கு வாழ்கின்ற மக்களின் வாழ்க்கைத்தரம்,மக்களின் பொருளாதார நிலமை என்பன பின் நிற்பதை நாங்கள் காணக்கூடியதாக உள்ளது.

-ஆகவே பொருளாதாரத்தை உயர்த்தக்கூடிய வகையிலே இன்றைய புதிய அரசாங்கம் பல்வேறு திட்டங்களை இந்த நாட்டிற்கும்,எல்லா மாவட்டங்களுக்கும் அறிமுகப்படுத்துகின்ற இதே நேரத்தில் மன்னார் மாவட்டத்திலும் பல்வேறு அபிவிருத்தி திட்டங்களை மேற்கொள்ளுவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

மாகாண சபையூடாக குறித்த திட்டங்களை முன்னெடுப்பதற்கான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.வடமாகாண சபைக்கும் மத்திய அரசாங்கத்திற்கும் இடையில் ஒரு நல்ல இணக்கப்பாடு ஏற்பட வேண்டும் என்பதனை நான் ஞாபகப்படுத்த விரும்புகின்றேன்.

சில கருத்து முறண்பாடுகள் காரணமாக இந்த மாவட்டத்தினுடைய முன்னேற்றங்கள் பின் தங்காமல் இருக்க வேண்டுமானால் நிச்சையமாக ஒரு புறிந்துனர்வு இருக்க வேண்டும்.

அதற்காக அடிபனிய வேண்டியதில்லை.

புறிந்துனர்வுடன் செயற்பட வேண்டும் என்பதே எனது கருத்தாகும்.

ஆகவே இந்த மாகாணத்தினுடைய முதலமைச்சர்,அமைச்சர்கள்,மாகாண சபை உறுப்பினர்கள் அரசாங்கத்துடன் ஓர் புறிந்துனர்வை ஏற்படுத்தி செயற்படுவதன் காரணமாக எதிர்காலத்தினை சுபீட்சமாக்க முடியும் என்ற நம்பிக்கை எனக்கிருக்கின்றது.

கடந்த சில தினங்களுக்கு முன் வடக்கைச் சேர்ந்த தொண்டர் ஆசிரியர்கள் கல்வி அமைச்சிற்கு முன்னால் போராட்டம் ஒன்றை நடாத்தினார்கள்.

தங்களுடைய நியமனத்தை பெற்றுத்தருமாறு கோரியே அவர்கள் போராட்டத்தை முன்னெடுத்திருந்தனர்.

நிச்சையமாக அவர்களுக்கான நியமனத்தை பெற்றுக்கொடுப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ள நிலையில் வடமாகாணத்தில் தொண்டர் ஆசிரியர்களாக செயற்படும் சுமார் 1,743 ஆசிரியர்களுக்கு நியமனத்தை பெற்றுக்கொடுப்பதற்கான நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

-மேலும் கிழக்கு மாகாணத்தில் 444 ஆசிரியர்களுக்கும் இந்த நியமனம் பெற்றுக்கொடுப்பதற்கான செயற்பாடுகளும் எமது அமைச்சினூடாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

-தற்போது இங்கு மேலும் ஒரு பிரச்சினை காணப்படுகின்றது.கடமை நிறைவேற்று அதிபர்கள் தொடர்பிலும் பிரச்சினை காணப்படுகின்றது.

முன்னால் பாராளுமன்ற உறுப்பினர் சட்சடத்தரணி ஹீனைஸ் பாரூக் அவர்கள் கடங்த காலங்களில் பாராளுமன்றத்தில் நாங்கள் ஒன்றாக இருந்த போது கடமை நிறைவேற்று அதிபர்களின் பிரச்சினைக்கு தீர்வை பெற்றுக்கொள்ள நடவடிக்கைகளை முன்னெடுத்தார்.

தற்போது வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கே.காதர் மஸ்தான் அவர்கள் நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றார்.

கடமை யாற்றுகின்ற அதிபர்களுக்கு கட்டாயம் நிறந்தர நியமனம் வழங்கப்பட வேண்டும் என்று நேற்று முந்தினம் வியாழக்கிழமை கூட பாராளுமன்றத்தில் ஒத்தி வைப்பு பிரேரனை ஒன்று மேற்கொள்ளப்பட்டது.இதற்கு எங்களுடைய கல்வி அமைச்சு சில நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றது.

அமைச்சரவை பத்திரம் தாக்கல் செய்து அதற்கான அனுமதியையும் பெற்றுள்ளது.வெகு விரைவிலே அந்த பகுதி நேர கடமை நிறைவேற்று அதிபர்களுக்கு நிறந்தர நியமனத்தை பெற்றுக்கொடுப்பதற்கான நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றோம்.பாராளுமன்றத்திலும் இதனை சொல்லியிறுக்கின்றோம்.

எனவே கடமை நிறைவேற்று அதிபர்களின் பிரச்சினைகளில் ஏற்கனவே அதிபர் சேவை தரம் 3 இற்கு போட்டிப்பரீட்சை நடாத்தும் போது அதிலே சில அதிபர்களும் உள்வாங்கப்பட்டுள்ளனர்.

சில அதிபர்கள் குறித்த போட்டிப்பரீட்சையில் கலந்து கொண்ட அதிபர்கலே தரம் 3 அதிபர் சேவையில் உள் வாங்கப்பட்டுள்ளனர்.அப்படி இல்லாத அதிபர்கள் மற்றும் விடுபட்ட அதிபர்களுக்குமே தற்போது பிரச்சினையாக உள்ளது.எனவே இவர்களுக்கும் வெகு விரைவிலே நிறந்தர நியமனம் பெற்றுக்கொடுக்கப்படும்.

வட கிழக்கிலே யுத்தம் இடம் பெற்ற போது இந்த அதிபர்கள் தான் பாடசாலையின் நிறைவேற்று அதிபர்கலாக செயற்பட்டு பாடசாலையை வழிநடத்தியுள்ளனர்.எனவே அவர்களுக்கு உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.என அவர் மேலும் தெரிவித்தார்.
வடமாகாண சபைக்கும் மத்திய அரசாங்கத்திற்கும் இடையில் ஒரு நல்ல இணக்கப்பாடு ஏற்பட வேண்டும்-மன்னாரில் கல்வி இராஜாங்க அமைச்சர் வி.இராதாகிருஸ்ணன்.-Photos Reviewed by NEWMANNAR on October 08, 2016 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.