திருடப்பட்ட பசு இறைச்சிக்காக மன்னார் பெரியகருசல் பகுதியில் வெட்டப்பட்டுள்ளதோடு, உயிரிழந்த கன்றுக்குட்டியும் மீட்பு.-Photos
திருடப்பட்ட மாடுகள் மன்னார் பெரியகருசல் பொது விளையாட்டு மைதானத்திற்கு பின் பகுதியில் இறைச்சிக்காக வெட்டப்பட்டு வரும் சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளமை குறித்து மன்னார் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
மன்னார் புதுக்குடியிறுப்பு கிராமத்தைச் சேர்ந்த ஒருவரது பசு திருடப்பட்டு இன்று(7) வெள்ளிக்கிழமை அதிகாலை சட்ட விரோதமான முறையில் இறைச்சிக்காக வெட்டியுள்ள நிலையில் அதன் தடையங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதோடு பசுவின் கன்றுக்குட்டி ஒன்று வெட்டப்பட்ட நிலையில் மீட்கப்பட்டுள்ளது.
இச்சம்பவம் தொடர்பில் இறைச்சிக்காக வெட்டப்பட்ட பசுவின் உரிமையாளர் மன்னார் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ள நிலையில் மன்னார் பொலிஸார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
சந்தேக நபர்கள் அடங்கிய குழு ஒன்றே மாடுகளை திருடி இறைச்சிக்காக வெட்டுவதாக அறிய முடிகின்றது.
அப்பகுதியில் ஏற்கனவே பல மாடுகள் வெட்டப்பட்ட தடையங்கள் காணப்படுவதாகவும் பிரதேச மக்கள் தெரிவித்துள்ளனர்.மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
திருடப்பட்ட பசு இறைச்சிக்காக மன்னார் பெரியகருசல் பகுதியில் வெட்டப்பட்டுள்ளதோடு, உயிரிழந்த கன்றுக்குட்டியும் மீட்பு.-Photos
Reviewed by NEWMANNAR
on
October 07, 2016
Rating:

No comments:
Post a Comment