ஹம்மர் ஆடம்பரக் காரை வாங்கிய யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்!
அண்மையில் சில நாடாளுமன்ற உறுப்பினர்கள் அரசாங்கத்தின் வரிச் சலுகையின் கீழ் வாகனங்களை பெற்றுக் கொண்டனர்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் தர்மலிங்கம் சித்தார்தன் மாத்திரம் ஹம்மர் (Hummer) வகை வாகனத்தை கொள்வனவு செய்துள்ளார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் BMW வாகனத்தை கொள்வனவு செய்துள்ளார் என்றும், ஏனைய 64 நாடாளுமன்ற உறுப்பினர்களும் Toyota Land Cruisers வாகனத்தை கொள்வனவு செய்துள்ளார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த ஹம்மர் (Hummer) வாகனம் முதன் முதலில் இராணுவத்தினரின் தேவைக்காகவே பயன்படுத்தப்பட்டுள்ளது.
அத்துடன் குறித்த ஹம்மர் கார், அதி விலை கூடியதும் சர்வதேச ரீதியில் ஆடம்பரமானதும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஹம்மர் ஆடம்பரக் காரை வாங்கிய யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்!
Reviewed by Author
on
October 19, 2016
Rating:

No comments:
Post a Comment