மன்னார் மாவட்டமானதுமுற்று முழுதாக ஸ்தம்பிதம் அடைந்துள்ளது.
யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் இருவர் கடந்த வியாழக்கிழமை இரவு பொலிஸாரினால் படுகொலை செய்யப்பட்டமையை கண்டித்து அனைத்து தமிழ் அரசியல் கட்சிகளினதும் ஏற்பாட்டில் பூரண ஹர்த்தாலுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
அழைப்பினை ஏற்று 25-10-2016 மன்னார் மாவட்டத்தின் பெரும்பாலான வர்த்தக நடவடிக்கைகள் முடக்கம் உணர்வற்ற சிலரின் கடைகள் மட்டும் ஒற்றைக்கதவில் திறந்துள்ளது.இவர்கள் எப்போதும் இப்படித்தான் இப்படியான பலரின் செயற்பாடுகள் தான் இனமான உணர்வு அற்றவர்களாகத்தான் இருக்கின்றார்கள் இவர்களைப்போன்றவர்களால் தான் இன்னும் நாம் அடிமைகளாகத்தான் உரிமைக்காக போராடிக்கொண்டிருக்கிறோம்.
மன்னார் மாவட்டத்தின் அரசாங்க திணைக்களங்கள் வங்கிகள் திறந்துள்ளபோதும் மக்கள் நடமாட்டம் குறைவாகவே உள்ளது தனியார் பேரூந்துகள் பயணத்தினை தடைசெய்துள்ளபோதும் அரசபேரூந்துகள் கடமையில் உள்ளது எது எப்படியிருப்பினும் மன்னார் மாவட்டமானதுமுற்று முழுதாக ஸ்தம்பிதம் அடைந்துள்ளது.
மன்னார் மாவட்டமானதுமுற்று முழுதாக ஸ்தம்பிதம் அடைந்துள்ளது.
Reviewed by Author
on
October 25, 2016
Rating:

No comments:
Post a Comment