மன்னாரில் சர்வதேச வறுமை ஒழிப்பு தினத்தையொட்டி மக்கள் பேரணி-படம்
சர்வதேச வறுமை ஒழிப்பு தினத்தையொட்டி இன்று(17) திங்கட்கிழமை மன்னாரில் மக்கள் பேரணியும்,விழிர்ப்புணர்வு கருத்தரங்கும் இடம் பெற்றது.
மன்னார் நகர பிரதேசச் செயலகத்தின் வாழ்வின் எழுச்சி சமூக அபிவிருத்தி திணைக்களத்தின் ஏற்பாட்டில் மன்னார் சமாதான அமைப்பின் அனுசரனையுடன் சர்வதேச வறுமை ஒழிப்பு தினத்தையொட்டி மன்னாரில் மக்கள் பேரணியும், விழிர்ப்புணர்வும் இடம் பெற்றது.
-மன்னார் பிரதான பால நுழைவாயிலில் மன்னார் சமாதான அமைப்பின் தலைவர் பீ.ஏ.அந்தோனி மார்க் தலைமையில் காலை 10 மணியளவில் சர்வதேச வறுமை ஒழிப்பு தினத்தையொட்டி மக்கள் பேரணி ஆரம்பமானது.
இதன் போது நூற்றுக்கணக்கானவர்கள் கலந்து கொண்டு பதாதைகளை ஏந்தியவாறு ஊர்வலத்தில் கலந்து கொண்டனர்.
குறித்த ஊர்வலகம் மன்னார் பஸார் பகுதியூடாக மன்னார் நகர சபை மண்டபத்தை சென்றடைந்தது.
பின் நகர சபை மண்டபத்தில் வறுமை ஒழிப்பு தொடர்பாக விழிர்ப்புணர்வு கருத்தரங்கு இடம் பெற்றது.
இதன் போது மன்னார் பிரதேசச் செயலாளர் கே.எஸ்.வசந்தகுமார், மன்னார் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி அஜந்த றொற்றிகோ,மன்னார் சர்வோதைய அமைப்பின் மாவட்ட இணைப்பாளர் உதயகுமார்,அரச சார்பற்ற ஒன்றியத்தின் தலைவர் செல்வாநந்தராஜா ஆகியோர் கலந்து கொண்டு சர்வதேச வறுமை ஒழிப்பு தொடர்பில் உரை நிகழ்த்தினர்.
இதன் போது சமூர்த்தி அதிகாரிகள்,சமூர்த்தி பயணாளிகள் என நூற்றுக்கனக்காணவர்கள் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.
மன்னார் நிருபர்-

மன்னாரில் சர்வதேச வறுமை ஒழிப்பு தினத்தையொட்டி மக்கள் பேரணி-படம்
Reviewed by Author
on
October 17, 2016
Rating:

No comments:
Post a Comment