வறுமையிலும் புலமை! புவிராஜ் ஒரு சாதனையாளர்
2016ஆம் ஆண்டுக்கான ஐந்தாம் தரப் புலமைப்பரிசில் பரீட்சையில் அம்பாறை மாவட்டத்தின் திருக்கோவில் கல்வி வலய தம்பிலுவில் கலைமகள் வித்தியாலயத்தைச் சேர்ந்த கிருபாகரன் புவிராஜ் அம்பாறை மாவட்டத்தில் 184 புள்ளிகளைப் பெற்று இரண்டாம் இடத்தை பெற்றுள்ளார்.
மாவட்ட நிலையில் இரண்டாமிடத்தைப் பெற்ற புவிராஜ் வறுமையின் பிடியில் சிக்கித்தவித்தவர்.
ஆனால் கேடில் விழுச்செல்வம் கல்வி கற்பதை ஒரு போதும் விட்டு விட வில்லை.
மின்விசிறியிலும், மின்குமிழ்களிலும் மத்தியில் கற்றலை மேற்கொள்வோர் மத்தியில் குறைந்த வசதியில் கற்றலை மேற்கொண்டு மாவட்டத்தில் இரண்டாம் நிலைக்குவந்த புவிராஜ் முயற்சி வறுமை கல்விக்குத் தடையில்லை என்ற கருத்துடையோருக்கும் ஒரு உதாரணம் ஆகும்.
திருக்கோவில் வலயம் முதல் 5 மாவட்ட நிலைகளில் 04பேரை சாதனையாளர்களாக திகழ வைத்துள்ளது.
இதேவேளை, மாணவரின் வெற்றிக்கு வலயக்கல்விப்ணிப்பாளர் ஆர்.சுகிர்தராஜன், மாணவனின் ஆசிரியரியர்கள் பெற்றோரின் முயற்சியும் ஒரு காரணியாகும் என்பதில் எந்த வித ஐயமும் கிடையாது.
வறுமையிலும் புலமை! புவிராஜ் ஒரு சாதனையாளர்
Reviewed by NEWMANNAR
on
October 08, 2016
Rating:

No comments:
Post a Comment