அண்மைய செய்திகள்

recent
-

பாலியல் தொல்லை கொடுத்த மாமனாரை அடித்தே கொன்ற மருமகள்.....


தமிழ்நாட்டின் கடலூர் மாவட்டத்தில் செக்ஸ் தொல்லை கொடுத்த மாமனாரை கட்டையால் அடித்தே கொன்ற மருமகளை பொலிசார் கைது செய்துள்ளனர்.

கடலூர் மாவட்டம் வளையமாதேவி பகுதியச் சேர்ந்தவர் அன்பழகன், இவர் சில ஆண்டுகளுக்கு முன்பு தமிழ்செல்வி என்பவரை திருமணம் செய்து கொண்டுள்ளார்.

இந்நிலையில், சமீபத்தில் உடல்நிலை சரியில்லாமல் அன்பழகன் இறந்துள்ளார். இதனால் தமிழ்செல்வி தனது குழந்தைகளுடன் தனது மாமனார் கந்தசாமி வீட்டில் வசித்து வந்துள்ளார்.

இந்நிலையில், கடந்த 30 ஆம் திகதி கந்தசாமி சாலையோரத்தில் உடலில் பலத்த காயங்களுடன் சடலமாக கிடந்துள்ளார். இதை பார்த்த அப்பகுதி மக்கள் பொலிசாருக்கு தகவல் கொடுத்துள்ளனர்.

தகவலறிந்த பொலிசார் உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்து கந்தசாமி உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

இந்த சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்டதில் கந்தசாமியின் மருமகள் தான் கொலை செய்துவிட்டு சடலத்தை ரோட்டில் போட்டுவிட்டதாக திடுக்கிடும் தகவல்கள் தெரியவந்தன.

மேலும், இது குறித்து தமிழ்செல்வியிடம் விசாரணை மேற்கொண்டதில், தான் கொலை செய்ததாகவும், இதற்கு மாமனாரின் அண்ணன் மகன் வேல்முருகன் உடந்தையாக இருந்ததாகவும் தெரிவித்துள்ளார்.

மேலும், தனது மாமனார் கந்தசாமி தினமும் குடித்துவிட்டு செக்ஸ் தொல்லை கொடுத்து வந்ததாகவும், ஒரு நாள் அளவுக்கு அதிகமாக குடித்துவிட்டு வந்து தன்னை அவரது ஆசைக்கு இணங்குமாறு வற்புறுத்தியுள்ளார்.

இதனால் தன்னை காப்பாற்றிக்கொள்ள வீட்டிலிருந்த கட்டையால் அவரை தாக்கியதில் அவர் இறந்துவிட்டதாகவும், பின்பு வேல்முருகனை அழைத்து உடலை சாலையோரத்தில் போட்டுவிட்டோம் என்றும் தெரிவித்துள்ளார்.

இதையடுத்து, பொலிசார் தமிழ்செல்வி மீது வழக்கு பதிவு செய்து கைது செய்துள்ளனர்.

பாலியல் தொல்லை கொடுத்த மாமனாரை அடித்தே கொன்ற மருமகள்..... Reviewed by Author on October 09, 2016 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.