குரு,ஆசான்,ஆசிரியர்,வாத்தியார்,இப்படி பல அவதாரங்கள் கொண்ட மொத்த உருவம் ஆசிரியர்கள்-ஆசிரியர் தின வாழ்த்துச் செய்தியில் செல்வம் அடைக்கலநாதன் எம்.பி.
மாணவ சமூகத்தை உருவாக்கி அவர்களுக்கு உயிரூட்டம் கொடுக்கும் ஆசிரியர்கள் போற்றப்பட வேண்டியவர்கள் என தமிழ் தேசியக்கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும்,பாராளுமன்ற குழுக்களின் பிரதி அவைத்தலைவருமான செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார்.
உலக ஆசிரியர் தினத்தையொட்டி அவர் விடுத்துள்ள வாழ்த்துச் செய்தியில் மேலும் குறிப்பிடுகையில்,,,
தன்னிடம் ஒப்படைக்கப்படும் மாணவனை நல்ல மாணவனாக மாற்றுவதோடு, நல்ல மனிதனாக மாற்றும் பொறுப்பும் ஆசிரியர்களுக்கு இருக்கிறது. அதே போல் ஆசிரியர்கள் என்பவர்கள் மாணவ சமூகத்தை உருவாக்குபவர்கள் அல்ல, மாறாக உயிரூட்டுபவர்கள்.
அக்டோபர் மாதம் 6ம் திகதி அனைத்துலக ஆசிரியர் தினத்தை உலகில் பெரும்பாலான நாடுகள் கொண்டாடுகின்றன.
இந்த நிலையில் யுத்தத்தில் சீர் குழைந்த வடக்கின் கல்விச் சமூகத்திற்கு உயிரூட்டம் கொடுத்து கட்டியெழுப்பிய பெறுமிதம் எம் ஆசிரியர்களையே சேரூம்.
தங்களை உருக்கி மாணவர்களுக்கு ஒழி கொடுக்கும் ஆசிரியர்கள் இந்த நாளில் கௌரவிக்கப்பட வேண்டியவர்கள்.
வன்னி பிரதேசத்தில் தொடர்ந்தும் பல்வேறு நெருக்குவாதங்களுக்கு முகம் கொடுத்து பல்வேறு துன்பங்களையும் அனுபவித்து எமது ஆசிரியர்கள் இன்று வரை மாணவர்களுக்காக ஒழி கொடுக்கின்றனர்.
மனிதனை முதன்மைப் படுத்த உரமாக இருப்பவர்கள் ஆசிரியர்கள் என்றால் அது மிகையாகாது. தன்னிடம் ஒப்படைக்கப்படும் மாணவர்களை வாழ்க்கை என்றால் என்ன? இதில் மாணவ, மாணவி சமூகத்தின் பங்கு எப்படி இருக்க வேண்டும் என்று ஒரு தெளிவை ஆசிரியர்கள் தான் கற்றுக் கொடுக்கின்றார்கள்.குரு, ஆசான், ஆசிரியர், வாத்தியார், இப்படி பல அவதரங்கள் கொண்ட மொத்த உருவம் ஆசிரியர்கள்.
உலகில் உள்ள அனைத்து மொழிகளிலும் வார்த்தைக்கு வார்த்தை எதிர்ப்பதம் உண்டு. ஆனால் ஆசான் என்ற ஒரு வார்த்தைக்கு இலக்கண வித்தகர்கள் எதிர்மறை வார்த்தை தரவில்லை.
ஒரு சமூகம், அதி உன்னத நிலை அடைந்து இருந்தால், நிச்சயமாக அதன் பின்னால் ஆசிரியர் சமூகம் இருப்பதாக அர்த்தம்.
எனவே சமூகத்தில் நல்ல பிரஜைகளை உறுவாக்க தங்களை உருக்கி ஒழி கொடுக்கும் ஆசிரியர்களை இந்த நல் நாளில் வாழ்த்தி ஆசிரியர் தின வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்ளுகின்றேன்.என குறிப்பிடப்பட்டுள்ளது.
குரு,ஆசான்,ஆசிரியர்,வாத்தியார்,இப்படி பல அவதாரங்கள் கொண்ட மொத்த உருவம் ஆசிரியர்கள்-ஆசிரியர் தின வாழ்த்துச் செய்தியில் செல்வம் அடைக்கலநாதன் எம்.பி.
Reviewed by NEWMANNAR
on
October 06, 2016
Rating:

No comments:
Post a Comment