மன்அல்-அஸ்ஹர் தேசிய பாடசாலையில் அமைக்கப்பட்ட தொழில்நுற்ப ஆய்வு கூடம் கல்வி இராஜாங்க அமைச்சர் இராதாகிருஸ்ணன் தலைமையில் திறந்து வைப்பு.- Photos
மத்திய கல்வி அமைச்சினால் மன்னார்-அல்-அஸ்ஹர் ம.வி தேசிய பாடசாலையில் அமைக்கப்பட்ட தொழில் நுற்ப ஆய்வு கூடம் இன்று வெள்ளிக்கிழமை(7) மாலை கல்வி இராஜாங்க அமைச்சர் வி.இராதாகிருஸ்ணன் அவர்களினால் வைபவ ரீதியாக திறந்து வைக்கப்பட்டது.
பாடசாலை அதிபர் எம்.வை.மாஹீர் தலைமையில் இடம் பெற்ற குறித்த நிகழ்வின் போது கல்வி இராஜாங்க அமைச்சர் வி.இராதாகிருஸ்ணன்,வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கே.காதர் மஸ்தான், வடமாகாண அமைச்சர் பா.டெனிஸ்வரன், வடமாகாண சபை உறுப்பினர் எச்.எம்.ரயீஸ்,முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி ஹீனைஸ் பாரூக், மன்னார் வலயக்கல்விப்பணிப்பாளர் திருமதி சுகந்தி செபஸ்ரியான் ஆகியோர் இணைந்து குறித்த தொழில் நுற்ப ஆய்வு கூடத்தினை வைபவ ரீதியாக திறந்து வைத்தனர்.
அதனைத் தொடர்ந்து பல்வேறு நிகழ்வுகள் இடம் பெற்றதோடு இவ்வருடம் இடம் பெற்ற தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில் மாவட்ட மட்டத்தில் 180 புள்ளிகளைப் பெற்று முதல் நிலை அடைந்த மாணவன் எச்.ஹினான் அஹமட் மற்றும் சித்தியடைந்த ஏனைய மாணவர்களுக்கும் அமைச்சர் விருதுகள் வழங்கி கௌரவித்தார்.
மேலும் கடந்த வருடம் இடம் பெற்ற உயர்தர பரீட்சையில் முதல் நிலை வகித்த மாணவர்களுக்கும் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.
குறித்த நிகழ்வில் பாடசாலை மாணவர்கள், ஆசிரியர்கள்,பெற்றோர்,பழைய மாணவர்கள் என பலர் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.
மன்அல்-அஸ்ஹர் தேசிய பாடசாலையில் அமைக்கப்பட்ட தொழில்நுற்ப ஆய்வு கூடம் கல்வி இராஜாங்க அமைச்சர் இராதாகிருஸ்ணன் தலைமையில் திறந்து வைப்பு.- Photos
Reviewed by NEWMANNAR
on
October 07, 2016
Rating:

No comments:
Post a Comment