அண்மைய செய்திகள்

recent
-

நீங்கள் மெல்ல மெல்ல இறந்து கொண்டிருக்கிறீர்கள்! பிரித்தானிய பெண்ணுக்கு நேர்ந்த துயரம்!


பிரித்தானியாவைச் சேர்ந்த பிரபல நிகழ்ச்சித்தொகுப்பாளரான சார்லி மலேரியா நோயால் தாக்கப்பட்டு இறக்கும் நிலையில் இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

பிரித்தானியாவைச் சேர்ந்த 33 வயதான Charlie என்பவர் பிரேசிலில் நடைபெற்ற ரியோ ஒலிம்பிக் போட்டியின் போது பிரபலபடுத்துவதற்காக 3000 மைல் இரு சக்கரவாகனத்தில் சென்றுள்ளார்.

அதன் விளைவாக தற்போது அவருக்கு மலேரியா தாக்கப்பட்டுள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இதன் காரணமாக அவர் டையாலசிஸ் நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், அது 50 சதவீதமே குணமடைந்திருப்பதாகவும், உயிர் பிழைப்பதற்கு 13 சதவீதம் தான் வாய்ப்புள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.

இது குறித்து அவர் கூறுகையில், நான் அப்பயணம் மேற்கொண்ட போது மிகுந்த பாதுகாப்புடன் தான் பயணம் மேற்கொண்டதாகவும், மருத்துவர்களின் அறிவுரைப்படி சில மருத்துவ முறைகள் மேற்கொண்டதாவும் கூறியுள்ளார்.

ஆனால் தற்போது நீரிழிவு நோய் அதிகரித்துள்ளதாகவும், சிறு நீரகங்கள் செயலிழந்து விட்டு வருவதாகவும், நீங்கள் உயிர்பிழைப்பதற்கு வாய்ப்புகள் சற்று குறைவு தான் என்றும் அதன் காரணமாக உங்கள் பெற்றோர்களை மருத்துவமனைக்கு வரச் சொல்லுங்கள் என மருத்துவர்கள் கூறியுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் அவருக்கு அளிக்கும் சிகிச்சைகள் மூலம் கோமா நிலைக்கு கூட செல்வதற்கு வாய்ப்பு உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

பிரபல நிகழ்ச்சித் தொகுப்பாளரான இவர் நட்சத்திர தொகுப்பாளராகவும் Sky, the BBC, ITV போன்ற தொலைக்காட்சிகளில் தொகுப்பாளராகவும் சிறந்து விளங்கியுள்ளார்.

சில மாதங்களுக்கு முன்னர் தனியார் தொலைக்காட்சி ஒன்றிற்கு தன்னுடைய மரணம் குறித்து இவர் பேசியதாகவும் அப்போது அவர் தன்னுடைய கண்களில் இருந்து கண்ணீர் மல்க மரணத்தை மகிழ்ச்சியாக ஏற்பதாகவும், யாருக்கு தெரியும் அவருடைய மரணம் எப்போது வரும் என்று ஆனால் எனக்கு தெரிந்து விட்டது என்றும் கூறி மனம் உருகி பேசியதாக கூறப்படுகிறது.

இவரின் நிலைமை கண்டு இவருடைய ரசிகர்கள் பலரும் மிகுந்த வருத்ததில், விரைவில் மீண்டு வருவீர்கள் என பிரார்த்தனை செய்து வருகின்றனர்.



நீங்கள் மெல்ல மெல்ல இறந்து கொண்டிருக்கிறீர்கள்! பிரித்தானிய பெண்ணுக்கு நேர்ந்த துயரம்! Reviewed by Author on October 23, 2016 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.