அண்மைய செய்திகள்

recent
-

மன்னார் வை.எம்.சி.ஏ(கிறிஸ்த்தவ வாலிபர் சங்கம்)அமைப்பினரால்-21-11-2016


மன்னார் வை.எம்.சி.ஏ(கிறிஸ்த்தவ வாலிப சங்கம்)அமைப்பினரால் கடந்த11  வருடங்களுக்கு மேலாக வருட இறுதியில் கிறிஸ்த்து பிறப்பை முன்னிட்டு பரிசுப்பொதிகள் வழங்கப்படுவது வழக்கம். இம்முறையும் இன்று காலை 11-30 மணியளவில் வை.எம்.சி.ஏ அலுவலகத்தில் வைத்து ஆதரவற்ற பிள்ளைகளை பராமரித்து வரும் இல்லங்களில் இருக்கின்ற பிள்ளைகளுக்கு வழங்கப்பட்டது.

அவுஸ்ரேலியாவில் இருக்கின்ற நல்ல உள்ளங்களின் நிதிப்பங்கீட்டில் தேவைப்படுகின்ற பிள்ளைகளின் பெயர் விபரங்களை பெற்றுக்கொண்டு அவர்களின் வயதடிப்படையில் அவர்களுக்கு தேவையான பொருட்களை அவர்களின் பெயரிட்டு பொதிசெய்து அனுப்புகிறார்கள்…
•    மன்னார் மாற்றுத்திறனாளிகள் இல்லம்
•    முருங்கன்-கிறிஸ்த்து அரசர் இல்லம்
•    மன்னார் அன்னை இல்லம்
•    மன்னார் வெற்றியின் நல் நம்பிக்கை இல்லம்
•    மன்னார் சிறுவர் கழகம் வை.எம்.சி.ஏ
•    பேசாலை செபமாலை மரியன்னை இல்லம்
•    பிரான்சிஸ்கன் அருட்சகோதரிகள் இல்லம்


மேற்குறிப்பிட் 07 இல்லங்களைச்சேர்ந்த 300 மாணவமாணவிகளுக்கு பரிசுப்பொதிகள் வழங்கப்பட்டதோடு
மன்னார் வை.எம்.சி.ஏ தலைவர் GL-யூட் பிகிறாடோ அவர்களின் தலமையில
மன்னார் வை.எம்.சி.ஏ அமைப்பின் செயலாளர் G.J.பாஸ்கரன்
நிர்வாக உத்தியோகத்தர் A.S.ரொபின்சன் குமார் ஆகியோருடன் அமைப்புகளின் பிரதிநிதிகள் அங்கத்தவர் ஏனையோர்  கலந்து கொண்டனர் பரிசுப்பொதிகளை பெற்றுக்கொண்ட மாணவமாணவிகளின் முகம்  மகிழ்ச்சியில் மலர்ந்தது,



































மன்னார் வை.எம்.சி.ஏ(கிறிஸ்த்தவ வாலிபர் சங்கம்)அமைப்பினரால்-21-11-2016 Reviewed by Author on November 21, 2016 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.