அண்மைய செய்திகள்

recent
-

இறந்த குழந்தைக்காக திருடனிடம் கையேந்தும் பாசக்கார தாய்! மனதை உருக வைக்கும் சம்பவம்...


பிரான்சில் தாய் ஒருவர் தனது இறந்த குழந்தையின் புகைப்படம் இருந்த கணினியை திருடிய திருடனுக்கு மனதை உருக வைக்கும் வேண்டுகோள் ஒன்றை விடுத்துள்ளார்.

Sigolène Moulin என்ற பெண்ணிற்கு சார்லஸ் என்ற ஆண் குழந்தை இருந்துள்ளது. கடந்த இரண்டு வருடத்திற்கு முன் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட சார்லஸ் 4 வயதில் உயிழந்துள்ளார்.

இந்நிலையில், Sigolène Moulin தனது இறந்த மகனின் நினைவாக அவனது அனைத்து புகைப்படங்களையும் Marseille பகுதியில் உள்ள அவர்களுக்கு சொந்தமான உணவகத்தில் உள்ள கணினியில் சேமித்து வைத்துள்ளார்.

சம்பவத்தின் போது, Sigolène Moulin - இன் கணவர் உணவக கதவை பூட்டாமல் சமையலறையில் இருந்துள்ளார். இந்நிலையில் கதவை திறந்து உள்ளே நுழைந்த திருடன் குறித்த கணினியை திருடிச்சென்றுள்ளார்.

இதனால் Sigolène Moulin சோகத்தில் ஆழ்ந்துள்ளார். சம்பவம் குறித்து பொலிசார் சிசிடிவி காட்சிகளை ஆராய்ந்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில், Sigolène Moulin திருடனுக்கு மனதை உருக வைக்கும் வகையில் வேண்டுகோள் ஒன்றை விடுத்துள்ளார்.

அதில், தனது இறந்த மகனின் அனைத்து புகைப்படமும் அதில் தான் உள்ளது. குறித்த புகைப்படங்கள் வேறு எதிலும் நான் சேமித்து வைக்கவில்லை. தயவு செய்து அந்த கணினியை என்னிடம் திருப்பி கொடுத்துவிடுங்கள் என வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இறந்த குழந்தைக்காக திருடனிடம் கையேந்தும் பாசக்கார தாய்! மனதை உருக வைக்கும் சம்பவம்... Reviewed by Author on November 25, 2016 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.