ரூ.594 கோடி கையாடல் செய்த புத்த பிக்கு!
தாய்லாந்தில் மடாதிபதி ஒருவர் கையாடல் மற்றும் திருட்டுப் பொருட்களை வாங்கிக் குவித்த வகையில் 32 மில்லியன் பவுண்டு முறைகேடு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தாய்லாந்தில் சக்தி வாய்ந்த தம்மகாயா மடத்தில் மடாதிபதியாக செயல்பட்டுவருபவர் Phra Dhammachayo. இவர் குறித்த மடத்தில் இருந்து 32 மில்லியன் பவுண்டு (இலங்கை மதிப்பில் ரூ.593,48,234,49 ) கையாடல் செய்துள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. மட்டுமின்றி விலைமதிப்பற்ற திருட்டு பொருட்களையும் மடாதிபதி Dhammachayo கைப்பற்றியுள்ளதாக கூறப்படுகிறது.
இவருக்கு உடந்தையாக மேலும் நான்கு புத்த பிக்குகள் செயல்பட்டதாக கூறப்படுகிறது. குறித்த குற்றச்சாட்டு உறுதியானதை அடுத்து மடாதிபதி Phra Dhammachayo மற்றும் அவருடன் இணைந்து குறித்த மோசடியில் ஈடுபட்ட பிக்குகளின் மீது தாய் அரசு நடவடிக்கை எடுக்க முடிவு செய்துள்ளது.
முறைகேடு வழக்கில் 16 ஆண்டுகள் சிறை தண்டணை பெற்று தற்போது சிறையில் இருக்கும் அதிகாரி ஒருவரும் குறித்த மோசடியில் ஈடுபட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த ஆண்டு துவக்கத்தில் மடாதிபதிக்கு எதிராக கைது நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டிருந்த போதும் அவர் இதுவரை கைது செய்யப்படவில்லை. அவரது மடத்தில் உள்ள பிக்குகள், குறித்த மடாதிபதி உடல் நலம் குன்றி இருப்பதாகவும், தற்போது அவரால் வழக்கு விசாரணையில் பங்கேற்க முடியாது எனவும் தெரிவித்து இருந்தபடியால், மடாதிபதி Dhammachayo இதுவரை அதிகாரிகளால் கைது செய்யப்படவில்லை.
தம்மகாயா பிரிவானது தாய்லாந்தின் முன்னால் பிரதமர் Thaksin Shinawatra என்பவரின் ஆதரவுடன் செயல்பட்டு வருவதாகும். இந்த வழக்கு தொடர்பில் விசாரணைக்கு சென்ற அதிகாரிகளை குறித்த மடத்தில் அனுமதிக்காமல் அங்குள்ள பிக்குகள் களேபரத்தை உருவாக்கி தடுத்துள்ளனர்.
கடந்த 2006 ஆம் ஆண்டு புரட்சி ஒன்றினால் பதவியில் இருந்து இறக்கப்பட்ட தக்சின் ஷினவத்ரா தற்போது நடைபெறும் ராணுவ ஆட்சியில் எந்தவித அதிகாரம் ஏதுமற்ற நிலையில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
ரூ.594 கோடி கையாடல் செய்த புத்த பிக்கு!
Reviewed by Author
on
November 24, 2016
Rating:

No comments:
Post a Comment