ரூ.9.25 கோடிக்கு விலை கேட்கப்பட்ட காளை மாடு! அப்படி என்ன ஸ்பெஷல்?
உழவர் சந்தை நிகழ்ச்சியில் பங்கேற்ற ஒரு காளை மாட்டை 9.25 கோடி ரூபாய்க்கு விலைக்கு கேட்டும் அதை அதன் உரிமையாளர் தர மறுத்துள்ள சம்பவம் அரங்கேறியுள்ளது.
இந்தியாவில் உள்ள ராஜஸ்தான் மாநிலத்தில் உழவர் சந்தை நிகழ்வு வருடா வருடம் நடைபெறுவது வழக்கம்.
இந்த வருடம் நடைபெற்ற நிகழ்ச்சியில் எல்லோர் கவனத்தையும் ஒரு காளை மாடு ஈர்த்து விட்டது.
யுவராஜ் என அழைக்கப்படும் அந்த எட்டு வயது காளையானது 1.5 டன் எடை மற்றும் 5.9 அங்குலம் உயரம் கொண்டதாகவும் உள்ளது.
இதை பராமரிப்பது சுலபமில்லை என கூறிய அதன் உரிமையாளர், அதற்கு தினமும் 20 லிட்டர் பாலும், 15 கிலோ பழங்களும் சாப்பிட கொடுப்பதாக கூறுகிறார்.
இதுவரை பல்வேறு போட்டிகளில் பங்கேற்று அதில் வெற்றி பெற்று தனக்கு கவுரவத்தை தேடித் தந்துள்ளது இந்த காளை என அவர் கூறியுள்ளார்.
அதுமட்டுமில்லாமல் அந்த யுவராஜ் காளையானது அவர் முதலாளிக்கு தனது விந்துக்களை விற்பனை செய்வதின் மூலம் மாதம் தோறும் 80 லட்சம் ரூபாய் வருமானம் பெற்று தருகிறது.
அந்த உழவர் சந்தைக்கு வந்த ஒரு பணக்காரர் அந்த காளையை 9.25 கோடி ரூபாய்க்கு விலைக்கு கேட்டதற்கு அதை விற்க முடியாது என்றும் என் வாழ்க்கையே இந்த காளையில் தான் அடங்கியுள்ளது என்றும் அதன் உரிமையாளர் தெரிவித்துள்ளார்.
ரூ.9.25 கோடிக்கு விலை கேட்கப்பட்ட காளை மாடு! அப்படி என்ன ஸ்பெஷல்?
Reviewed by Author
on
November 12, 2016
Rating:

No comments:
Post a Comment